சட்டவிரோதமான முறையில் மீன்பிடி படகு மூலம் அவுஸ்ரேலியா கடற் பரப்பில் பிரவேசித்த இலங்கையர்கள் 23 பேரை அந்நாட்டு அரசாங்கம் நாடு கடத்தியுள்ளது.
கடந்த மே மாதம் 27ஆம் திகதி வென்னப்புவ பகுதியில் இருந்து நீர்கொழும்பு மற்றும் மூதூர் ஆகிய பிரதேசங்களை சேர்ந்த பெண் ஒருவர் உட்பட 23 பேர் பயணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் இன்று அதிகாலை 03.50 மணியளவில் அவுஸ்ரேலியாவுக்குச் சொந்தமான விசேட விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
பின்னர் விமான நிலையத்தில் வைத்து குடிவரவு குடியகல்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்ட இவர்கள், மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
அண்மைய நாட்களாக பெரும் எண்ணிக்கையிலானவர்கள் சட்டவிரோதமான முறையில் நாட்டை விட்டு தப்பிச் செல்லும் முனைப்புகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.