சுவிட்சர்லாந்தில் நகரமொன்றின் நிர்வாகத்தினர் ஆடுகளை பணியில் அமர்த்திய வினோத சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
சுவிட்சர்லாந்தின் வலாயிஸ் கான்டனின் தலைநகரான சியோனில் இவ்வாறு ஆடுகள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளன.
சுவிட்சர்லாந்தில் தகுதியான ஆளணி வளத்தைப் பெற்றுக் கொள்வதில் சிரமங்கள் காணப்படும் பின்னணியில் இவ்வாறு ஆடுகள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளன.
அடா, பெல்லா, அதெனா மற்றும் விக்டோரியா என்னும் நான்கு செம்மறி ஆடுகளை நகர நிர்வாகம் பணியில் அமர்த்தியுள்ளது.
நகரின் பூங்காக்களில் காணப்படும் புற்களை வெட்டுவதற்காக இவ்வாறு செம்மறி ஆடுகள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளன.
பூங்காக்களின் சில பகுதிகளில் புற்களை வெட்டுவதற்காக இந்த ஆடுகளை பணியில் அமர்த்தியுள்ளதாக சியோன் நகர நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஆடுகளுக்கு உணவு கிடைக்கும் அதேவேளை, புற்களையும் வெட்டி முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.
இலத்திரனியல் இயந்திரங்களைக் கொண்டு மேற்கொள்ளப்படும் புல் வெட்டுதலானது செலவு கூடியது என்பதுடன் ஒலி மாசடையும் தன்மையுடையது என தெரிவிக்கப்படுகின்றது.