நாட்டின் தற்போதைய ஆட்சி முறைமையில் மற்றும் மாற்றம் கொண்டு வரப்படும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
அரசாங்க அமைப்பையும் மாற்றுவதற்கு நிச்சயமாக பாடுபடுவேன் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
அதற்கு ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொஸ்கம பொரலுகொட ஸ்ரீ வர்தனாராமயே விகாரையின் விகாராதிபதியின் நலன் விசாரிப்பதற்காக சென்ற போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பிரதமர் இதனை குறிப்பிட்டுள்ளார்.