Search

Menu

Keeping you Informed News and Views..

ஆஸ்திரியாவின் முடக்கம் சுவிஸ் சுற்றுலாத்துறையில் சாதக நிலை

சுற்றுலாப் பயணிகள், சுவிட்சர்லாந்தின் ஸ்கை ரிசோர்ட்கள் நோக்கிப் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.

ஆஸ்திரியாவின் முடக்கம் சுவிஸ் சுற்றுலாத்துறையில் சாதக நிலை

சுற்றுலாப் பயணிகள், சுவிட்சர்லாந்தின் ஸ்கை ரிசோர்ட்கள் நோக்கிப் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.

ஆஸ்திரியாவில் முடக்க நிலை அறிவிக்கப்பட்டுள்ளதன் காரணமாக பெரும் அளவிலான சுற்றுலாப் பயணிகள் சுவிட்சர்லாந்து நோக்கிப் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.

இந்த ஆண்டில் சுவிட்சர்லாந்தில் ஸ்கை ரிசோர்ட்களுக்கான பதிவுகள் முன்னொரு போதும் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது.

இந்த குளிர்காலத்தில் சுவிஸ் ஸ்கை ரிசோர்ட்களுக்கு அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகளின் வருகையை எதிர்பார்க்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

ஆஸ்திரியாவில் கோவிட் பெருந்தொற்று காரணமாக முடக்க நிலைமை அறிவிக்கப்பட்டுள்ளமை, சுவிஸ் ஸ்கை ரிசோர்ட்களில் கூடுதல் எண்ணிக்கையில் சுற்றுலாப் பயணிகள் பதிவு செய்வதற்கான முக்கிய ஏதுக்களில் ஒன்றாக காணப்படுகின்றது.

கடந்த ஆண்டை விடவும் மிக அதிக எண்ணிக்கையிலான பதிவுகள் கிடைக்கப் பெறுவதாக எதிர்வரும் மாதங்களில் இந்த எண்ணிக்கை மேலும் கூடும் என எதிர்பார்ப்பதாகவும் Tourismus Adelboden-Lenk-Kandersteg நிறுவனத்தின் Silvia Nüesch தெரிவிக்கின்றார்.

கடந்த பருவ காலத்தை விடவும் இந்த ஆண்டில் பதிவுகள் ஆரோக்கியமான முறையில் காணப்படுவதாக  Wengen Tourism நிறுவனத்தின் Rolf Wegmüller தெரிவிக்கின்றார்.

எங்கிள்பர்க் டைடில் பகுதியில் கிட்டத்தட்ட மொத்த ரிசோர்ட்களும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது என பிராந்தியத்தின் சுற்றுலாத்துறை பணிப்பாளர் Andres Lietha தெரிவித்துள்ளார்.

ஸாஸ் ப்ரீ மற்றும் ஸாஸ் வெலி ஆகிய ஸ்கை ரிசோர்ட் பகுதிகளிலும் பதிவுகள் திருப்தி அடையும் வகையில் காணப்படுவதாக Mattia Storni தெரிவிக்கின்றார்.

இவ்வாறு சுவிட்சர்லாந்தின் அநேகமான பகுதிகளில் காணப்படும் ஸ்கை ரிசோர்ட்களில் முன்பதிவுகள் ஆரோக்கியமாக காணப்படுகின்றது என தெரிவிக்கப்படுகின்றது.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

Search here