Search

Menu

Keeping you Informed News and Views..

இந்திய விசேட பிரதிநிதிகள் குழு இலங்கை விஜயம்

இந்தியாவின் விசேட பிரதிநிதிகள் குழுவொன்று நாளைய தினம் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளது.

இந்திய விசேட பிரதிநிதிகள் குழு இலங்கை விஜயம்

இந்தியாவின் விசேட பிரதிநிதிகள் குழுவொன்று நாளைய தினம் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பொருளாதார ஆலோசகர் வி. ஆனந்த நாகேஸ்வரன் தலைமையிலான இந்திய அரசாங்கத்தின் உயர்மட்ட குழு நாளை (23) இலங்கை வரவுள்ளது

விசேட விமானம் மூலம் நாளை இலங்கைக்கு வரவுள்ள குறித்த குழுவினர், மேலதிக பொருளாதார உதவிகளை மேற்கொள்வதற்காக இங்குள்ள நிலைமைகளை மதிப்பிடவுள்ளனர்.

மூன்று மணித்தியாலங்கள் மாத்திரம் நாட்டில் தங்கியிருக்கும் இக்குழுவினர், ஜனாதிபதி மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.

இதேவேளை இலங்கைக்கு எரிபொருள் கொள்வனவிற்காக 500 மில்லியன் டொலர் மற்றொரு கடனுதவியை வழங்கவும் இந்தியா நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

இந்திய விசேட பிரதிநிதிகள் குழு இலங்கை விஜயம்

இந்தியாவின் விசேட பிரதிநிதிகள் குழுவொன்று நாளைய தினம் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளது.

இந்திய விசேட பிரதிநிதிகள் குழு இலங்கை விஜயம்

Search here