Search

Menu

Keeping you Informed News and Views..

இலங்கைக்குள் பிரவேசிக்க சீன கப்பலுக்கு இன்னும் அனுமதியில்லை

சீனாவின் ஆய்வுக்கப்பலான ‘யுவான் வாங் 5’ கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் வருவதாகவே அக் கப்பலை இலங்கை கடல் எல்லைக்குள் அனுமதிக்குமாறு இதுவரை அரச மேலிடத்தில் இருந்து எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை என இலங்கை துறைமுக அதிகார சபையின் துறைமுக அதிகாரி நிர்மல் சில்வா தெரிவித்துள்ளார்

இலங்கைக்குள் பிரவேசிக்க சீன கப்பலுக்கு இன்னும் அனுமதியில்லை

சீனாவின் ஆய்வுக்கப்பலான ‘யுவான் வாங் 5’ கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் வருவதாகவே அக் கப்பலை இலங்கை கடல் எல்லைக்குள் அனுமதிக்குமாறு இதுவரை அரச மேலிடத்தில் இருந்து எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை என இலங்கை துறைமுக அதிகார சபையின் துறைமுக அதிகாரி நிர்மல் சில்வா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இலங்கைக்கு வரும் திசையில் மாற்றிக்கொண்டு குறித்த கப்பல் வேறு திசை நோக்கி பயணிக்கும் வாய்ப்புகள் உள்ளதாகவும் ஒருசில சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

எனினும், இலங்கையில் இருந்து 650 கடல் மைல் தொலைவில் ‘யுவான் வாங் 5’ கப்பல் மெதுவாக இலங்கையை நோக்கி நகர்ந்துகொண்டுள்ளதாக தொடர்ச்சியாக இந்திய செய்தி நிறுவனங்கள் தகவல்களை வெளியிட்டு வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை சீன கப்பல் நாட்டுக்குள் பிரவேசிக்க அனுமதி வழங்குமாறு ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியிலிருந்து சுயாதீனமாக இயங்கி வரும் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில மற்றும் வாசுதேவ நாணயக்கார உள்ளிட்ட தரப்பினர் ஜனாதிபதிடம் கோரியுள்ளனர்.

மேலும், இந்தியாவின் பாதுகாப்பு விவகாரங்களில் இலங்கை கூடுதல் கரிசனை கொள்ள வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
சீன ஆய்வுக் கப்பல் விவகாரம் பிராந்திய வலயத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

Search here