Search

Menu

Keeping you Informed News and Views..

இலங்கைச் சிறார்கள் சட்டவிரோதமாக தத்தெடுக்கப்பட்டமைக்கு சுவிஸ் இழப்பீடு வழங்க வேண்டுமென ஐ.நா கோரல்

1970 ஆம் ஆண்டு முதல் 1990  ஆம் ஆண்டு வரையில் சுமார் 900 இலங்கை குழந்தைகள் சட்டவிரோதமான முறையில் சுவிட்சர்லாந்து பெற்றோருக்கு விற்பனை

இலங்கைச் சிறார்கள் சட்டவிரோதமாக தத்தெடுக்கப்பட்டமைக்கு சுவிஸ் இழப்பீடு வழங்க வேண்டுமென ஐ.நா கோரல்

லங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் குழந்தைகள் தத்தெடுக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை நடாத்தி பாதிக்கப்பட்டோருக்கு உரிய நட்டஈட்டை வழங்க வேண்டுமென சுவிட்சர்லாந்தை ஐக்கிய நாடுகள் அமைப்பு  (The UN Committee on Enforced Disappearances (CED) வலியுறுத்தியுள்ளது.

ஐக்கிய நாடுகள் அமைப்பின் வலிந்து காணாமல் செய்யப்படுதல் குறித்த குழுவினால் இவ்வாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

சில தசாப்தங்களுக்கு முன்னதாக இலங்கையிலிருந்து சிறுவர் சிறுமியர் கடத்தப்பட்டு சுவிட்சர்லாந்தில் வளர்க்கப்பட்டுள்ளதாக விசாரணைகளின் மூலம் நிரூபணமாகியுள்ளது.

இவ்வாறு சட்டவிரோதமான முறையில் குழந்தைகள் தத்தெடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டமையினால் பாதிக்கப்பட்டோருக்கு உரிய நட்டஈடு வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

சட்டவிரோத தத்தெடுத்தல்களை தடுக்க முடியாமை குறித்து சுவிட்சர்லர்நது வருந்துவதாகக் அறிவித்துள்ளமை வரவேற்கப்பட வேண்டும் எனவும், செல்வந்த நாடான சுவிட்சர்லாந்து இதனை விடவும் பாதிக்கப்பட்டோருக்கு நியாயம் வழங்கியிருக்க வேண்டுமென ஐக்கிய நாடுகள் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இவ்வாறு கடத்தப்பட்ட சிறுவர் சிறுமியர் தற்பொழுது வயது வந்தவர்களாக வளர்ந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

1980 மற்றும் , 1990 களில் குழந்தைகள் தத்தெடுக்கப்பட்ட போது வலிந்து காணாமல் செய்யப்பட்ட சம்பவங்கள் இடம்பெற்றுள்ளனவா?, போலியான ஆவணங்கள் தயாரிக்கப்பட்டனவா? ஆள் அடையாளங்கள் அழிக்கப்பட்டனவா? போன்ற விடயங்கள் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகள் நடாத்தப்பட வேண்டுமேன கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான குற்றச் செயல்களினால் பாதிக்கப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் சுவிட்சர்லாந்து அரசாங்கம் நியாயமான நட்டஈட்டுத் தொகையை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

1970 ஆம் ஆண்டு முதல் 1990  ஆம் ஆண்டு வரையில் சுமார் 900 இலங்கை குழந்தைகள் சட்டவிரோதமான முறையில் சுவிட்சர்லாந்து பெற்றோருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கடந்த டிசம்பர் மாதம் சுவிஸ் அரசாங்கம் அதிகாரபூர்வமாக ஒப்புக்கொண்டது.

தத்தெடுப்புக்கள் தொடர்பில் நிலவும் பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்றில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு மூன்று ஆண்டுகளின் பின்னர் அறிக்கையின் மூலம் அரசாங்கம் விளக்கம் அளித்துள்ளது.

குறிப்பிட்ட காலத்தில் சுமார் 11000 இலங்கை குழந்தைகள் ஐரோப்பிய நாடுகளுக்கு தத்து எடுப்பதற்காக விற்பனை செய்யப்பட்டுள்ளதாக சூரிச் பல்கலைக்கழகத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த பெப்ரவரி மாதம் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதுபோன்ற செயல்களால் பாதிக்கப்பட்ட எந்தவொரு நபருக்கும் இழப்பீடு வழங்குவதற்கான உரிமையை சுவிஸ் அதிகாரிகள் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றும் குழு பரிந்துரைத்தது.

வலுக்கட்டாயமாக காணாமல் போவதற்கு எதிராக அனைத்து நபர்களையும் பாதுகாப்பதற்கான சர்வதேச மாநாட்டிற்கு ஆதரவாக சுவிட்சர்லாந்தின் ஈடுபாட்டைப் பாராட்டியதோடு, அதைச் செயல்படுத்தவும் ஊக்குவிக்கவும் மாநிலக் கட்சி எடுத்துள்ள நடவடிக்கைகளுக்காகவும், சுவிட்சர்லாந்தின் தற்போதைய குற்றவியல் குறியீட்டில் அமல்படுத்தப்பட்ட காணாமல் போனதற்கான வரையறை தெளிவு இல்லை, எனவே எந்தவொரு தெளிவற்ற தன்மையையும் நீக்க மாநிலக் கட்சி அதை மறுபரிசீலனை செய்ய பரிந்துரைத்தது.

Adoptions of Children from Sri Lanka in Switzerland,

Source: Swissinfo.ch / Lankapage.com

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

இலங்கைச் சிறார்கள் சட்டவிரோதமாக தத்தெடுக்கப்பட்டமைக்கு சுவிஸ் இழப்பீடு வழங்க வேண்டுமென ஐ.நா கோரல்

1970 ஆம் ஆண்டு முதல் 1990  ஆம் ஆண்டு வரையில் சுமார் 900 இலங்கை குழந்தைகள் சட்டவிரோதமான முறையில் சுவிட்சர்லாந்து பெற்றோருக்கு விற்பனை

இலங்கைச் சிறார்கள் சட்டவிரோதமாக தத்தெடுக்கப்பட்டமைக்கு சுவிஸ் இழப்பீடு வழங்க வேண்டுமென ஐ.நா கோரல்

Search here