வெளிநாடொன்றில் இலங்கைத் தமிழ் ஏதிலிகள் சிலர் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளனர்.
பிரித்தானியாவின் கட்டுபாட்டில் உள்ள டியாகோ கார்சியா தீவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஐந்து இலங்கை தமிழ் ஏதிலிகள் இவ்வாறு தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளனர்.
இந்நிலையில், அவர்கள் 5 பேரும் ருவண்டா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ருவண்டா தலைநகரம் கிகாலியில் உள்ள ருவண்டா வைத்தியசாலையில் குறித்த 5 ஏதிலிகளும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த இலங்கை ஏதிலிகள் டியாகோ கார்சியாவில் 18 மாதங்களாக தடுப்பில் இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.