கடன் நெருக்கடியைத் தீர்ப்பதற்கு முழுமையாக ஆதரவளிப்பதாக சீனா மீண்டும் உறுதியளித்துள்ளது.
இலங்கை எதிர்நோக்கும் சிரமங்களையும் சவால்களையும் புரிந்து கொண்டுள்ளதாக மேலும் தெரிவிததுள்ளது.
சீனாவின் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் Zhao Lijian மேலும், இலங்கைக்கான உதவிகள் எந்தவொரு அரசியல் சரத்துகளுடனும் இணைக்கப்படவில்லை என்றும், சீனாவின் முதலீடு மற்றும் இலங்கையில் நிதியுதவி செய்வதில் எந்தவொரு சுயநல அரசியல் ஆதாயங்களையும் ஒருபோதும் நாடாது என்றும் வலியுறுத்தினார்.
ஊடகவியலாளர் சந்திப்பின் போது பேசிய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் Zhao Lijian, இலங்கை எதிர்கொள்ளும் சிரமங்கள் மற்றும் சவால்கள் குறித்து சீனா முழுமையாக தொடர்பு கொண்டுள்ளதுடன், கடனை திருப்பிச் செலுத்துவது குறித்து இலங்கையுடன் கலந்துரையாடி அவற்றை உரிய முறையில் தீர்ப்பதில் தொடர்புடைய நிதி நிறுவனங்களுக்கு சீனா ஆதரவளிக்கிறது.
இலங்கையின் சமூகப் பொருளாதார அபிவிருத்திக்கு அவர்களின் திறன் அனுமதிக்கும் வரையில் சீனா அனைத்து காலங்களிலும் ஆதரவை வழங்கியுள்ளதாக அவர் கூறினார்.
இந்த ஆண்டு சீன-இலங்கை இராஜதந்திர உறவுகளின் 65 வது ஆண்டு நிறைவையும், ரப்பர்-ரைஸ் ஒப்பந்தத்தின் 70 வது ஆண்டு நிறைவையும் குறிக்கிறது என்று செய்தித் தொடர்பாளர் Zhao Lijian மேலும் கூறினார்.