Search

Menu

Keeping you Informed News and Views..

இலங்கையில் உணவுப் பொருட்களின் விலைகளில் பாரிய அதிகரிப்பு

இலங்கையில் உணவுப் பொருட்களின் விலைகள் பாரியளவில் அதிகரித்துள்ளதாக மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கையில் உணவுப் பொருட்களின் விலைகளில் பாரிய அதிகரிப்பு

இலங்கையில் உணவுப் பொருட்களின் விலைகள் பாரியளவில் அதிகரித்துள்ளதாக மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் மாதத்தில் நாட்டின் பணவீக்க வீதம் 9.9 வீதமாக உயர்வடைந்துள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.

உணவுப் பொருட்களின் விலைகள் 17.5 வீதத்தினால் உயர்வடைந்துள்ளதுடன் உணவு அல்லாத பொருட்களின் விலைகள் 6.4 வீதத்தினால் உயர்வடைந்துள்ளது.

கடந்த ஒக்ரோபர் மாதத்துடன் ஒப்பீடு செய்யும் போது நவம்பர் மாதத்தில் கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டி 2.6 வீதத்தினால் உயர்வடைந்துள்ளது.

நீண்ட காலத்தின் பின்னர் ஒரு மாத இடைவெளியில் இவ்வளவு வீதம் விலை அதிகரிப்பு கடந்த நவம்பர் மாதம் பதிவாகியுள்ளது.

கடந்த 2013ம் ஆண்டின் பின்னர் நவம்பர் மாதத்தில் விலைகள் 9.8 வீதமாக உயர்வடைந்துள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கோவிட்டின் புதிய திரிபான ஒமிக்ரோன் திரிபு காரணமாக மேலும் பொருளாதார நெருக்கடி நிலைமை உருவாகும் சாத்தியங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரக்கறி, அரிசி, மீன், முட்டை, கோழி இறைச்சி, தேங்காய், பேக்கரி உற்பத்திகள், பால் மா உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் விலைகள் வெகுவாக உயர்வடைந்துள்ளது.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

Search here