Search

Menu

Keeping you Informed News and Views..

இலங்கையில் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடாத்த ஆயிரம் கோடி ரூபா தேவை

இலங்கையில் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை நடாத்துவதற்காக சுமார் ஆயிரம் கோடி ரூபா செலவிடப்பட வேண்டியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடாத்த ஆயிரம் கோடி ரூபா தேவை

இலங்கையில் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை நடாத்துவதற்காக சுமார் ஆயிரம் கோடி ரூபா செலவிடப்பட வேண்டியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பத்து பில்லியன் ரூபா (1,000 கோடி) செலவிடப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளதோடு, இது தொடர்பான மதிப்பீடுகள் தேர்தல் ஆணைக்குழுவினால் நிதி அமைச்சிற்கு ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது.

இந்தத் தேர்தலுக்காக சுமார் இரண்டரை முதல் மூன்று இலட்சம் அதிகாரிகள் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் பொலிஸ் அதிகாரிகளும் இதில் அடங்குவர். தேர்தல் நடவடிக்கைகளின் போது கூடுதல் கொடுப்பனவுகள், போக்குவரத்து கொடுப்பனவுகள், எரிபொருள், அச்சிடுதல் கட்டணம், தண்ணீர், மின்சாரம், மின் பிறப்பாக்கி போன்றவற்றுக்கு பணம் செலவிடப்படுகிறது.

வார நாட்களில் தேர்தலை நடத்தினால், அதிகாரிகளுக்கு வழங்கப்படும் கொடுப்பனவை ஓரளவு குறைக்க முடியும் என்றும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் டிசம்பர் இறுதியில் நடைபெற உள்ளது.

தேர்தல் நடவடிக்கைகள் குறைந்தது இரண்டு மாதங்கள் ஆகும். உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் அடுத்த ஆண்டு (2023) பெப்ரவரி அல்லது மார்ச் மாத தொடக்கத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது. அதற்கமைய பெரும்பாலும் தேர்தல் சனிக்கிழமை நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

Search here