இலங்கையில் பொருட்களின் விலைகள் மீண்டும் அதிகரித்துச் செல்லும் நிலையை அவதானிக்க முடிகின்றது.
இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 400 கிராம் இறக்குமதி செய்யப்பட்ட பால்மா பொதி ஒன்றின் புதிய விலை 1240 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது என இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எரிவாயு, எரிபொருள், முட்டை, மின்சாரக் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் சேவைகளின் விலைகள் மீளவும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
பொருட்களின் விலை உயர்வு காரணமாக பால் மா போன்ற சில பொருட்களுக்கு சந்தையில் தட்டுப்பாடு நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மின்சாரக் கட்டணத்தை மேலும் அதிகரிப்பதனை தவிர மாற்று வழியில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.