Search

Menu

Keeping you Informed News and Views..

இலங்கை உரிமை மீறல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் – எங்கிளிக்கன் தேவாலயம்

இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென எங்கிளிக்கின் தேவாலயம், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையிடம் கோரியுள்ளது.

இலங்கை மனித உரிமை நிலைமைகள் மோசமடைந்து செல்வது குறித்து மிகுந்த கரிசனை கொண்டுள்ளதாக இலங்கை எங்கிளிக்கன் தேவாலயம் சுட்டிக்காட்டியுள்ளது.

அரச நிறுவனங்கள், அரசியல் விவகாரங்கள் என்பன இராணுவ மயப்படுத்தப்பட்டு வருவதாகவும், கோவிட் பெருந்தொற்று தடுப்பூசி ஏற்றுகையும் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

அமைதியான முறையில் முன்னெடுக்கப்படும் போராட்டங்கள் மீது அரசாங்கம் அழுத்தங்களை பிரயோகிப்பதாகத் தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 48ம் அமர்வுகளின் போது இலங்கையின் நிலைமை குறித்து எங்கிளிக்கன் தேவாலயம் அறிக்கையொன்றை முன்வைத்துள்ளது.

ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான எங்கிளிக்கன் தேவாயலங்களுக்கான வதிவிடப் பிரதிநிதி Jack Palmer-White இந்த அறிக்கையை சமர்ப்பித்துள்ளார்.

முஸ்லிம்கள் கோவிட் வைரஸை திட்டமிட்டு பரப்புவதாக வெளியான பிரச்சாரங்களுக்கு எதிராக அரசாங்கம் பெரியளவில் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

எந்தவொரு  அடிப்படையிலும் எவரும் ஒடுக்குமுறைக்கு உட்படுத்தப்படாத வகையிலான சட்டங்கள் அரசியல் அமைப்பில் உள்ளடக்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் முக்கிய பதவிகளில் இராணுவ அதிகாரிகள் தொடாந்தும் நியமிக்கப்படுவது குறித்து கரிசனை வெளியிடப்பட்டுள்ளது.

ஆளும் கட்சியின் உறுப்பினர்கள் தொடர்புடைய குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறும் விவகாரத்தில் மெத்தனக் போக்கு பின்பற்றப்பட்டு வருவதாகவும், குறிப்பாக ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பவ விசாரணைகளை சுட்டிக்காட்ட முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாற்றுக் கருத்துக்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படாத ஓர் நிலைமையை தற்பொழுது அவதானிக்க முடிவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

Search here