Search

Menu

Keeping you Informed News and Views..

இலங்கை சிறையில் தமிழ் அரசியல் கைதிளை மிரட்டிய அமைச்சர் மீது என்ன நடவடிக்கை?

வெலிகடை, அநுராதபுரம் சிறைகளில் வலுக்கட்டாயமாக பிரவேசித்து, கைதிகளை அச்சுறுத்தியதாக அமைச்சர் லொஹான் ரத்வத்த மீது குற்றம் சுமத்தப்பட்டது.

இலங்கை சிறையில் தமிழ் அரசியல் கைதிளை மிரட்டிய அமைச்சர் மீது என்ன நடவடிக்கை?

வெலிகடை மற்றும் அநுராதபுரம் சிறைச்சாலைகளில் வலுக்கட்டாயமாக பிரவேசித்து, கைதிகளை அச்சுறுத்தியதாக அமைச்சர் லொஹான் ரத்வத்த மீது குற்றம் சுமத்தப்பட்டது. இந்த சம்பவம் கடந்த 12 ஆம் திகதி இடம்பெற்றதாக கூறப்பட்டது.

அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதியை முழந்தாளிடச் செய்து, துப்பாக்கி முனையில் அச்சுறுத்தியதாக கூறப்படும் இந்த சம்பவம் குறித்து முறைப்பாடு கிடைக்கும் பட்சத்தில், சம்பவம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள அமைச்சர் லொஹான் ரத்வத்தவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஓய்வு பெற்ற ரியல் அட்மிரல் சரத் வீரசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.

பல்வேறு தரப்பிடமிருந்து எழுந்த கண்டனங்களை அடுத்து, சிறைச்சாலைகள் மற்றும் மறுசீரமைப்பு ராஜாங்க அமைச்சு பதவியை, லொஹான் ரத்வத்த கடந்த 15 ஆம் திகதி ராஜினாமா செய்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அனுப்பி வைக்கப்பட்ட லொஹான் ரத்வத்தவின் ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்திருந்தது.

லொஹான் ரத்வத்த கடந்த 12 ஆம் திகதி மதுபோதையில் தனது நண்பர்களுடன் குழுவாக சிறைச்சாலைக்குள் பிரவேசித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அநுராதபுரம் சிறைச்சாலைக்குள் சென்ற லொஹான் ரத்வத்த, அங்குள்ள தமிழ் அரசியல் கைதியை முழந்தாளிடச் செய்து, துப்பாக்கி முனையில் மிரட்டியதாக கூறப்பட்டது.

இந்த நிலையில், சிறைச்சாலைக்குள் ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டமைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர கூறியுள்ளார்.

லொஹான் ரத்வத்த, அனுமதி பெற்ற அவரது துப்பாக்கியை பயன்படுத்தியிருக்கலாம் என தான் நம்புவதாகவும், எவ்வாறாயினும், சம்பவம் தொடர்பில் எவரேனும் முறைப்பாடு செய்யும் பட்சத்தில், நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் அவர் கூறினார்.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

Search here