Search

Menu

Keeping you Informed News and Views..

இலவச கோவிட் பரிசோதனைகளை தொடருமாறு அரசாங்கத்திற்கு அழுத்தம்

இலவச கோவிட் பரிசோதனைகளை தொடருமாறு சுவிட்சர்லாந்து அரசாங்கத்திற்கு அழுத்தம் பிரயோகிக்கப்பட்டு வருகின்றது.

இலவச கோவிட் பரிசோதனைகளை தொடருமாறு அரசாங்கத்திற்கு அழுத்தம்

இலவச கோவிட் பரிசோதனைகளை தொடருமாறு சுவிட்சர்லாந்து அரசாங்கத்திற்கு அழுத்தம் பிரயோகிக்கப்பட்டு வருகின்றது.

கோவிட்19 பெருந்தொற்று பரிசோதனைகளுக்கு கட்டணம் அறவீடு செய்யக் கூடாது என பல்வேறு தபர்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

நோய் அறிகுறியற்ற நபர்களுக்கு மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளுக்கு கட்டணம் அறவீடு செய்வது குறித்து அரசாங்கம் பரிசீலனை செய்து வருகின்றது.

கட்டண அறவீட்டு திட்டத்தை முன்னெடுக்க வேண்டாம் என நாடாளுமன்ற சுகாதார குழு கோரிக்கை விடுத்துள்ளது.

நோய்த் தொற்று பரவுகையை கட்டுப்படுத்துவதற்கான பிரதான ஏதுவாக பரிசோதனைகள் காணப்படுவதாகவும், இது வைத்தியசாலைகளில் நோயாளர்கள் நிரம்பி வழிவதனை தடுப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

நாட்டின் பிரதான அரசியல் கட்சிகளும், 260000 பேர் கையொப்பமிட்ட இணைய கையொப்பங்கள் அடங்கிய மகஜர் ஒன்றின் மூலமும் கட்டண அறவீட்டுத் திட்டத்தினை முன்னெடுக்க வேண்டாம் என கோரப்பட்டுள்ளது.

எவ்வாறெனினும், நாட்டின் 26 கான்டன்களின் பெரும்பாலானவை இலவச பரிசோதனைகளை ரத்து செய்வதற்கு சாதமான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளன.

இந்த விவகாரம் தொடர்பில் அரசாங்கம் அடுத்த வெள்ளிக்கிழமை தீர்மானம் எடுக்க உள்ளது.

முன்னதாக எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 1ம் திகதி தொடக்கம் பரிசோதனைகளுக்கு மக்களிடம் கட்டணம் அறவீடு செய்யப்படும் என அரசாங்கம் அறிவித்திருந்தது.

இதேவேளை, கோவிட் தடுப்பூசி சான்றிதழ் தொடர்பில் சமூகத்தில் மாறுபட்ட நிலைப்பாடுகள் நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பொதுநிகழ்களில் பங்கேற்பதற்கு இந்த சான்றிதழை பயன்படுத்த வேண்டுமென்ற திட்டத்திற்கும் எதிர்ப்பு வெளியிடப்பட்டு வருகின்றது.

சில இடங்களில் இந்த சான்றிதழ் முறைமைக்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

Search here