Search

Menu

Keeping you Informed News and Views..

இலவச கோவிட் பரிசோதனை குறித்த சுவிஸ் அரசாங்கத்தின் அறிவிப்பு

இலவச கோவிட் பரிசோதனை தொடர்பில் சுவிட்சர்லாந்து அரசாங்கம் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இலவச கோவிட் பரிசோதனை குறித்த சுவிஸ் அரசாங்கத்தின் அறிவிப்பு

இலவச கோவிட் பரிசோதனை தொடர்பில் சுவிட்சர்லாந்து அரசாங்கம் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

முன்னதாக இந்த மாத இறுதியுடன் இலவச கோவிட் பரிசோதனைகளை நிறுத்திக் கொள்ள அரசாங்கம் திட்டமிட்டிருந்தது.

எனினும், இந்த யோசனை தொடர்பில் பல்வேறு எதிர்புகள் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன்படி தற்பொழுது அமுலில் உள்ள இலவச கோவிட் பரிசோதனை நடைமுறையை எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 10ம் திகதி வரையில் நீடிப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இலவச கோவிட் பரிசோதனை வழங்கும் கால எல்லையை நீடிப்பது குறித்து கவனம் செலுத்தி வருவதாக சுவிட்சர்லாந்தின் சுகாதார அமைச்சர் Alain Berset தெரிவித்துள்ளார்.

இந்த திட்டத்தின் கீழ் தடுப்பூசி ஏற்றிக் கொள்ளாதவர்கள் எதிர்காலத்தில் கோவிட் பரிசோதனைக்கான கட்டணங்களை  செலுத்த நேரிடும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

கோவிட் பரிசோதனைகளுக்கு கட்டணம் அறவீடு செய்யும் திட்டத்திற்கு சுவிஸ் அமைச்சரவை ஏற்கனவே அனுமதி வழங்கியுள்ளதுடன், கான்டன்களின் கருத்துக்களை கேட்டறியும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

Search here