Search

Menu

Keeping you Informed News and Views..

இளம் தலைமுறையினர் முகக் கவசம் அணிந்து மதுபானம் கொள்வனவு செய்கின்றனர்

சுவிட்சர்லாந்தில் இளம் தலைமுறையினர் முக்க் கவசம் அணிந்து கொண்டு மதுபானம் மற்றும் சிகரட் என்பனவற்றை கொள்வனவு செய்வதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கோவிட் பெருந்தொற்று காரணமாக சுவிட்சர்லாந்தில் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

எனினும், இவ்வாறு முகக் கவசம் அணிந்து கொள்வதனால், இளையவர்கள் சிகரட் மற்றும் மதுபானம் என்பனவற்றை சுலபமாக கொள்வனவு செய்ய முடிகின்றது என தெரிவிக்கப்படுகின்றது.

சூரிக் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மேற்கொண்ட புலனாய்வு விசாரணைகளின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

மதுபானம் மற்றும் சிகரட் கொள்வனவு செய்யும் அடையாள அட்டைகளை பரிசோதனை செய்யும் நடைமுறையை அரைவாசிக்கும் மேற்பட்ட வர்த்தக நிலையங்கள் பின்பற்றுவதில்லை எனவும், இதனால் 14 முதல் 17 வயதான சிறார்கள் மதுபானம், சிகரட் வகைகளை கொள்வனவு செய்வதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சட்டவிரோதமான முறையில் இளையவர்களுக்கு மதுபானம், சிகரட் விற்பனை செய்யும் நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பெருந்தொற்று நிலைமைகளுக்கு முன்னரை விடவும் தற்பொழுது இளையவர்கள் கூடுதல் எண்ணிக்கையில் இவ்வாறு சிகரட் மற்றும் மதுபான வகைகளை கொள்வனவு செய்கின்றனர் என தெரிவிக்கப்படுகின்றது.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

Search here