ஈரானில் நாடு தழுவிய ரீதியில் இடம்பெற்ற போராட்டங்களால் ஏற்பட்ட அமைதியின்மையில் 300 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக ஈரானிய பாதுகாப்பு ஜெனரல் ஒருவர் ஒப்புக்கொண்டார்,
இஸ்லாமிய குடியரசின் கடுமையான ஆடைக் கட்டுப்பாட்டை மீறியதாகக் கூறி தடுத்து வைக்கப்பட்டிருந்த மஹ்சா அமினி (22) என்பவரின் மரணத்தையடுத்து ஈரானில் போராட்டங்கள் வெடித்தன.
இந்நிலையில், துணை ராணுவ வான்படை பிரிவின் தளபதியான ஜெனரல் அமீர் அலி ஹாஜிசாதே இந்த போராட்டத்தில் 300 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக இணையதள செய்தி சேவை ஒன்றுக்கு தெரிவித்தார்.
இதன்போது அமைதியின்மை தொடங்கியதில் இருந்து 451 போராட்டக்காரர்கள் மற்றும் 60 பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டுள்ள நிலையில், 18,000 க்கும் அதிகமானோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தன்னார்வலர் குழு ஒன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.