Search

Menu

Keeping you Informed News and Views..

உயர் சுவிஸ் அறிவியல் விருதை வென்றார் ஆன்லைன் உளவியலாளர்

பெர்ன் பல்கலைக்கழகத்தின் உளவியலாளர் Thomas Berger இந்த ஆண்டு Marcel Benoist டின் சுவிஸ் அறிவியல் விருதைப் பெறுகிறார்.
Thomas Berger

உயர் சுவிஸ் அறிவியல் விருதை வென்றார் ஆன்லைன் உளவியலாளர்

2021 உயர் அறிவியல் விருதுகள் இணைய அடிப்படையிலான சிகிச்சையில் அவரது பங்களிப்புக்காக ஒரு உளவியலாளருக்கும், கட்டி உயிரணுக்கள் பற்றிய கண்டுபிடிப்புகளுக்காக ஒரு புற்றுநோய் ஆராய்ச்சியாளருக்கும் வழங்கப்படுகின்றன.

பெர்ன் பல்கலைக்கழகத்தின் உளவியலாளர் Thomas Berger இந்த ஆண்டு Marcel Benoist டின் சுவிஸ் அறிவியல் விருதைப் பெறுகிறார். இது சுவிஸ் நோபல் பரிசுக்கு சமமானதாகக் கருதப்படுகிறது.

Berger டிஜிட்டல் சிகிச்சை கருவிகளை (செயலிகள் மற்றும் இணையதளங்கள் மூலம்) உருவாக்கி செயற்படுவதற்காக அங்கீகரிக்கப்படுகிறார். மனச்சோர்வு, பதட்டம், தூக்கக் கோளாறு மற்றும் நோய்களுக்குப் பின்னரான மனநலக் கோளாறுகள் போன்றவற்றைத் தடுக்கவும் சிகிச்சை அளிக்கிறார்.

உளவியல் சிகிச்சையின் ஒரு முன்னணி சர்வதேச நிபுணராக, மனநல சிகிச்சையின் வழக்கமான வடிவங்களுடன் ஒப்பிடும்போது ஆன்லைன் சிகிச்சை முறைகளின் செயல்திறனை ஆராய்ந்து அனுபவப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார் என்று மார்செல் பெனோயிஸ்ட் அறக்கட்டளை திங்களன்று கூறியது.

40 வயதிற்குட்பட்ட இளம் ஆராய்ச்சியாளர்களுக்கான Latsis பரிசு சூரிச்சில் உள்ள பெடரல் தொழில்நுட்பக் கழகத்தின் புற்றுநோய் ஆராய்ச்சியாளர் Nicola Aceto வுக்கு வழங்கப்பட்டது.

ETH சூரிச்சில் உள்ள இத்தாலிய இணை பேராசிரியரான இவர், tumour செல்கள் (CTCs) பற்றி ஆராய்ச்சி செய்தார். CTC கள் metastases களை உருவாக்குவதோடு, பெருஞ்சுரப்பி மற்றும் மார்பக புற்றுநோயில் அதிகமாக இருப்பதை அவர் அவதானித்தார்.

CTC கொத்துக்களை மருந்துகளால் உடைக்க முடிந்தால் உடலில் புற்றுநோய் பரவுவதை குறைக்க முடியும் என்று அவர் கண்டறிந்தார் என லாட்ஸிஸ் அறக்கட்டளை கூறியது.

விருது பெற்றவர்களுக்கு CHF250,000 ($ 272,000) மற்றும் CHF100,000 மதிப்புள்ள பரிசுகள் நவம்பரில் சுவிஸ் தலைநகர் பெர்னில் நடக்கும் கூட்டு விழாவில் வழங்கப்படும்.

மார்செல் பெனோயிஸ்ட் பரிசு 1920 முதல் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது, அதே நேரத்தில் லாட்ஸிஸ் பரிசு 1983 இல் தொடங்கப்பட்டது. நியமனம் மற்றும் தேர்வு செயல்முறை சுவிஸ் தேசிய அறிவியல் அறக்கட்டளையால் கையாளப்படுகிறது.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

உயர் சுவிஸ் அறிவியல் விருதை வென்றார் ஆன்லைன் உளவியலாளர்

பெர்ன் பல்கலைக்கழகத்தின் உளவியலாளர் Thomas Berger இந்த ஆண்டு Marcel Benoist டின் சுவிஸ் அறிவியல் விருதைப் பெறுகிறார்.

உயர் சுவிஸ் அறிவியல் விருதை வென்றார் ஆன்லைன் உளவியலாளர்

Thomas Berger

Search here