Search

Menu

Keeping you Informed News and Views..

உஸ்பெகிஸ்தானின் முடக்கப்பட்ட சொத்துக்களை மீள வழங்க இணங்கிய சுவிஸ் அரசு

முன்னாள் சோவித் ஒன்றிய நாடான உஸ்பெகிஸ்தானின் முடக்கப்பட்ட சொத்துக்களை மீள வழங்குவதற்கு சுவிட்சர்லாந்து அரசாங்கம் இணங்கியுள்ளது.

உஸ்பெகிஸ்தானின் முடக்கப்பட்ட சொத்துக்களை மீள வழங்க இணங்கிய சுவிஸ் அரசு

முன்னாள் சோவித் ஒன்றிய நாடான உஸ்பெகிஸ்தானின் முடக்கப்பட்ட சொத்துக்களை மீள வழங்குவதற்கு சுவிட்சர்லாந்து அரசாங்கம் இணங்கியுள்ளது.

உஸ்பெகிஸ்தானின் ஆட்சியாளர் இஸ்லாம் கரிமோவின் புதல்விக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் காரணமாக சுவிஸ் அரசாங்கம் பெருந்தொகை சொத்துக்களை முடக்கியது.

சில நிபந்தனைகளின் அடிப்படையில் சுவிட்சர்லாந்து குறித்த சொத்துக்களை மீள ஒப்படைக்க இணங்கியுள்ளது.

உஸ்பெகிஸ்தானில் பேண்தகு அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்காக ஐக்கிய நாடுகள் நிதியமொன்றை உருவாக்கும் நோக்கில் இந்த சொத்துக்கள் வழங்கப்பட உள்ளது.

131 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இவ்வாறு வழங்கப்பட உள்ளது.

சுவிட்சர்லாந்து ஜனாதிபதி இக்னேசியோ காஸீஸ் மற்றும் உஸ்பெகிஸ்தான் நீதி அமைச்சர் ருஸ்லான்பெக் டெவ்லெட்டோவ் ஆகியோர் முடக்கப்பட்ட நிதியை விடுவிப்பது குறித்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளனர்.

உஸ்பெகிஸ்தான் மக்களின் நலனுக்காக இந்த நிதி பயன்படுத்தப்பட உள்ளதாக சுவிஸ் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

உஸ்பெகிஸ்தான் ஆட்சியாளர்கள் குற்றச் செயல்களில் ஈடுபட்டமைக்காக சுவிட்சர்லாந்து அரசாங்கம் சுமார் 842 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான சொத்துக்களை கடந்த 2012ம் ஆண்டில் முடக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

Search here