Search

Menu

Keeping you Informed News and Views..

எத்தியோப்பியாவிலிருந்து வெளியேறுமாறு சுவிஸ் பிரஜைகளுக்கு அறிவுறுத்தல்

எத்தியோப்பியாவிலிருந்து  வெளியேறுமாறு தமது நாட்டுப் பிரஜைகளுக்கு சுவிட்சர்லாந்து அரசாங்கம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

எத்தியோப்பியாவிலிருந்து வெளியேறுமாறு சுவிஸ் பிரஜைகளுக்கு அறிவுறுத்தல்

எத்தியோப்பியாவிலிருந்து  வெளியேறுமாறு தமது நாட்டுப் பிரஜைகளுக்கு சுவிட்சர்லாந்து அரசாங்கம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

கிழக்கு ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான எத்தியோப்பியாவின் பாதுகாப்பு நிலைமை மோசமடைந்து செல்வதாக சுட்டிக்காட்டியுள்ளது.

எந்தவொரு காரணத்திற்காகவும் எத்தியோப்பியாவிற்கு பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என சுவிஸ் வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

வர்த்தக விமானங்களைப் பயன்படுத்தி கூடிய சீக்கிரம் எத்தியோப்பியாவிலிருந்து வெளியேறுமாறு கோரப்பட்டுள்ளது.

எத்தியோப்பியாவின் தலைநகர் அடிஸ் அபாபாவில் அமைந்துள்ள அந்நாட்டுக்கான சுவிட்சர்லாந்து தூதரகத்தில் பதிவு செய்து கொண்ட 230 சுவிஸ் பிரஜைகள் தற்பொழுது எத்தியோப்பியாவில் தங்கியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஜெர்மனிய அரசாங்கமும் அந்நாட்டுப் பிரஜைகளை எத்தியோப்பியாவிலிருந்து வெளியேறுமாறு கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எத்தியோப்பியாவின் பாதுகாப்பு நிலைமை குறித்து ஐக்கிய நாடுகள் அமைப்பும் கரிசனை வெளியிட்டுள்ளது.

எத்தியோப்பியாவில் இடம்பெற்று வரும் உள்நாட்டு போரில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மைய நாட்களாக வன்முறைகள் அதிகரித்துச் செல்லும் நிலையில் சுவிட்சர்லாந்து தனது பிரஜைகளை அங்கிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தியுள்ளது.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

Search here