நாட்டில் எரிபொருள் விலைகளின் அதிகரிப்பு காரணமாக அனைத்து பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகளிலும் அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
இதேவேளை, எரிபொருள் விலை அதிகரிப்பால், சோறு பார்சல் மற்றும் கொத்து ரொட்டி விலையை 10 வீதத்தால் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எனினும், சோடீஸ், பலகாரங்கள் மற்றும் தேநீர் விலைகள் அதிகரிக்கப்படமாட்டாது என மேற்படி சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
மேலும், எரிபொருள் விலையேற்றத்தையடுத்து, போக்குவரத்து கட்டணத்தை அதிகரிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி ஆட்டோவுக்கான ஆரம்ப கட்டணமாக 100 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆட்டோ ஆரம்பக்கட்டணம் 20 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஆரம்ப கிலோ மீற்றருக்கு அடுத்தப்படியாக, பயணிக்கும் ஒவ்வொரு கிலோமீற்றருக்கும் 80 ரூபா விதம் அறவிட தீர்மானிக்கப்பட்டுள்ளது என அகில இலங்கை ஆட்டோ சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
பாடசாலை போக்குவரத்து கட்டணம், வாடகை வண்டி சேவை உள்ளிட்ட மேலும் சில போக்குவரத்து சேவை கட்டணங்களும் எகிறவுள்ளன.