Search

Menu

Keeping you Informed News and Views..

எரிவாயு சிலிண்டர் வெடிப்புச் சம்பவங்கள் குறித்து நாடாளுமன்றில் கேள்வி

நாட்டின் பல்வேறு பகுதிகளில் எரிவாயு சிலிண்டர்கள் வெடித்துச் சிதறும் சம்பவங்கள் குறித்து எதிர்க்கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

எரிவாயு சிலிண்டர் வெடிப்புச் சம்பவங்கள் குறித்து நாடாளுமன்றில் கேள்வி

நாட்டின் பல்வேறு பகுதிகளில் எரிவாயு சிலிண்டர்கள் வெடித்துச் சிதறும் சம்பவங்கள் குறித்து எதிர்க்கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே இது தொடர்பில் இன்று நாடாளுமன்றில் கேள்வி எழுப்பியுள்ளார்.

சமையல் எரிவாயு வெடிப்புச் சம்பவங்கள் அதிகளவில் பதிவாகி வருவதாகவும் இது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டுமெனவும் அவர் கோரியுள்ளார்.

இவ்வாறான சம்பவங்களின் மூலம் மக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

எரிவாயு கலவையில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றம் காரணமாகவே இந்த வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகின்றன என அரச இரசாயன பகுப்பாய்வு பிரிவு தெரிவித்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, ஹோகந்தர பன்னிப்பிட்டி-கொட்டாவ பிரதேசத்தில் வீடொன்றில் வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாகவும் எரிவாயு சிலிண்டர் காரணமாக இந்த வெடிப்பு ஏற்பட்டிருக்கலாம் என கொட்டாவ பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இன்று அதிகாலை இடம்பெற்ற இந்த வெடிப்புச் சம்பவத்தினால் குறித்த வீடு பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதுடன், இந்த சம்பவத்தில் வீட்டில் வசிக்கும் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த மாதத்தில் மாத்திரம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் எரிவாயு சிலிண்டர்கள் வெடித்துச் சிதறும் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

Search here