Search

Menu

Keeping you Informed News and Views..

ஐரோப்பாவில் வௌ்ள அனர்த்தங்களால் பலி எண்ணிக்கை 120 ஐ தாண்டியது

​ஐரோப்பாவின் வடமேற்கு பகுதியில் பதிவாகியுள்ள மிக அதிகமான மழை வீழ்ச்சியால், ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்து, மோசமான அழிவுகள் ஏற்பட்டுள்ளன.

ஐரோப்பாவில் வௌ்ள அனர்த்தங்களால் பலி எண்ணிக்கை 120 ஐ தாண்டியது

மேற்கு ஜெர்மனி மற்றும் ஐரோப்பாவின் பிற பகுதிகளில் ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ளப்பெருக்கால் சுமார் 1,300 பேர் காணாமல் போயுள்ளனர்.

மேற்கு ஜேர்மனியின் சில பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தால் இறந்தவர்களின் எண்ணிக்கை 106 ஆக உயர்ந்துள்ளது. மேற்கு ஐரோப்பாவில் வெள்ளத்தால் ஏற்பட்ட மொத்த இறப்பு எண்ணிக்கை 125 ஐ கடந்துள்ளதுடன், இன்னும் கணக்கிடப்படாத நூற்றுக்கணக்கான மக்களுக்கான தேடல் தொடர்கிறது.

​ஐரோப்பாவின் வடமேற்கு பகுதியில் பதிவாகியுள்ள மிக அதிகமான மழை வீழ்ச்சியால், ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்து, மோசமான அழிவுகள் ஏற்பட்டுள்ளன.

பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, லக்சம்பர்க், நெதர்லாந்தின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்த நிலையில், மேற்கு ஜேர்மனியில் மிக அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளான Rhineland-Palatinate மாநிலத்தில் குறைந்தது 63 பேரும், வடக்கு Rhine-Westphalia மாநிலத்தில் 43 பேரும் பலியாகியுள்ளனர். பெல்ஜியத்தில், இறப்பு எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில், காலநிலை மாற்றத்திற்கு எதிராக தீர்க்கமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மேர்க்கல் அழைப்பு விடுத்துள்ளார்.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

Search here