Search

Menu

Keeping you Informed News and Views..

ஐரோப்பா கொவிட் தடுப்பூசித் திட்டம் ஆமை வேகத்தில் உள்ளது: உலக சுகாதார அமைப்பு அதிருப்தி

80 வயதுக்கு மேற்பட்டோரைத் தவிர்ந்த மற்றைய அனைத்து வயதுப் பிரிவுகளிலும் புதிய கொவிட் 19 தொற்று அதிகரித்து வருவதாக உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.

ஐரோப்பா கொவிட் தடுப்பூசித் திட்டம் ஆமை வேகத்தில் உள்ளது: உலக சுகாதார அமைப்பு அதிருப்தி

ஐரோப்பாவின் கொவிட் 19 தடுப்பூசி திட்டம் ‘ஏற்றுக்கொள்ளமுடியாத அளவுக்கு மெதுவாக’ உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய மக்கள் தொகையில் 10 சத வீதத்தினரே இதுவரை கொவிட் 19 தடுப்பூசியின் முதலாவது சொட்டு மருந்தை எடுத்துள்ளனர். அதே நேரம் 4 சத வீதத்தினருக்கு மட்டுமே இதுவரை இரண்டாவது சொட்டு மருந்தும் கொடுக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடுகளின் கொவிட் 19 க்கு எதிரான தடுப்பு மருந்து பிரசாரங்கள் ‘ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு மெதுவாக’ இருப்பதாகவும், இது நோய் தொடரும் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

“இந்த நோயைத் தடுப்பதற்கு தடுப்பூசிகளே சிறந்த வழியாக உள்ளன. எனினும் ஐரோப்பிய மக்கள் தொகையில் 10 சத வீதத்தினரே இதுவரை கொவிட் 19 தடுப்பூசியின் முதலாவது ஒரு வேளை மருந்தை எடுத்துள்ளனர். அதே நேரம் 4 சத வீதத்தினருக்கு மட்டுமே இதுவரை முழுமையான பாதுகாப்பு தரும் வகையில் இரண்டு வேளை மருந்தும் கொடுக்கப்பட்டுள்ளது” என்று உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பாவுக்கான பிராந்திய பணிப்பாளர் Hans Kluge கூறியுள்ளார்..

“தடுப்பூசி திட்டம் மெதுவாக செல்வதால் தாமதமாகிய அட்டவணையை ஈடு செய்ய நாம் முன்னர் பின்பற்றிய அதே பொதுச் சுகாதார மற்றும் சமூக நடவடிக்கைகளை தொடர வேண்டியுள்ளது”.என்று Dr. Kluge மேலும் கூறினார்

தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கைகளைப் பார்க்கையில் பிரச்சினையின் உண்மை நிலை

ஐரோப்பிய யூனியனின் 27 நாடுகளிடம் இருந்து மறைக்கப்பட்டுள்ளதாகவே கூற வேண்டியுள்ளது. ஏனெனில் ஐரோப்பிய யூனியனில் இதுவரை 5.6 சத வீத மக்களுக்கே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. எனினும் பிரிட்டனைப் பொறுத்த வரை அங்கு இதுவரை 46 சத வீத மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

கொவிட் 19 நோய்க்கான தடுப்பூசி பிரசாரங்களை ஆரம்பித்த ஐரோப்பிய அரசாங்கங்கள் ‘போலிப் பாதுகாப்பு உணர்வினை’ கொண்டிருப்பதையிட்டு Kluge எச்சரிக்கை விடுத்திருக்கிறார். புதிய கொரோனா வைரஸ் தொற்று மற்றும் மரணங்களைப் பொறுத்தவரை உலகிலேயே இரண்டாவதாக மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட பிராந்தியம் ஐரோப்பாவாகும் என்று அவர் குறிப்பிட்டார்.

80 வயதுக்கு மேற்பட்டோரைத் தவிர்ந்த மற்றைய அனைத்து வயதுப் பிரிவுகளிலும் புதிய கொவிட் 19 தொற்று அதிகரித்து வருவதாக உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. திடீரென்று நோய் அதி;கரிப்பதன் தாக்கம் குறைந்திருப்பதையே தடுப்பூசி செயற்பாடுகள் காட்டுகின்றன என்பதற்கு இது ஒரு அடையாளமாகும். எனினும் நோய்த்தடுப்பு வீதம் உயர்ந்த அளவில் இல்லாததால் வைரஸ் பரவுவதை தடுக்க முன் கூட்டியே நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும என்று ஐக்கிய நாடுகளின் சுகாதார முகவரகம் கூறுகிறது.

பாரிஸ் மற்றும் ஏனைய இடங்களில் உள்ள மருத்துவ மனைகள் நிரம்பி வழியும் நிலையில், அங்கு நோய்ப் பரவலை தடுக்க பாடசாலைகளை மூன்று வார காவத்துக்கு மூடவும், உள்ளுர் பயணத்தடையை விதிக்கவும் பிரெஞ்சு ஜனாதிபதி Emmanuel Macron நடவடிக்கை எடுத்திருக்கிறார்.

ஐரோப்பிய பிராந்தியத்தில் கடந்த வாரம் 1.6 மில்லியன் பேருக்கு புதிதாக கொரோனா தொற்று எற்பட்டதாகவும் இதில் கிட்டத்தட்ட 24 ஆயிரம் பேர் வரை உயிரிழந்ததாகவும் உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.

27 நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய யூனியனில் வைரஸ் தொற்றிய ஆறு லட்சத்து 12 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாக Johns Hopkins பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. பிரிட்டன், ரஷ்யா, சுவிட்சர்லாந்து மற்றும் ஏனைய ஐரோப்பிய நாடுகளை கணக்கிலெடுத்தால் கொரோனா வைரஸ் காரணமாக ஐரோப்பாவில் 9 லட்சத்து 28 ஆயிரம் பேருக்கு மேல் உயிரிழந்துள்ளனர்.

“இந்த பிராந்தியத்தின் நிலை நாம் கடந்த பல மாதங்களில் பார்த்ததை விட மோசமாக உள்ளது” என்று உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பாவுக்கான அவசர நிலை முகாமையாளர் Dorit Nitzan கூறுகிறார். எதிர்வரும் மத விடுமுறை காலங்களின்போது மக்கள் பயணங்களையும் கூட்டமாக கூடி நிற்பதையும் கூடியவரை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

“பல நாடுகள் தேவையான புதிய நடைமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளன. அனைவரும் அவற்றை கூடியவரை பின்பற்ற வேண்டும்” என்றும் Dr. Nitzan கேட்டுக்கொண்டார்

ஐரோப்பிய நாடுகளுக்கான தனது செய்தி “நடவடிக்கைகளை தளர்த்துவதற்கு இது நேரமல்ல” என்பதாகும் என்று Dr.Kluge கூறுகிறார்.

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

ஐரோப்பா கொவிட் தடுப்பூசித் திட்டம் ஆமை வேகத்தில் உள்ளது: உலக சுகாதார அமைப்பு அதிருப்தி

80 வயதுக்கு மேற்பட்டோரைத் தவிர்ந்த மற்றைய அனைத்து வயதுப் பிரிவுகளிலும் புதிய கொவிட் 19 தொற்று அதிகரித்து வருவதாக உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.

ஐரோப்பா கொவிட் தடுப்பூசித் திட்டம் ஆமை வேகத்தில் உள்ளது: உலக சுகாதார அமைப்பு அதிருப்தி

Search here