ஐரோப்பிய ஒன்றியத்துடனான பேச்சுவார்த்தைகளை சுவிட்சர்லாந்து அரசாங்கம் தீவிரப்படுத்த தீர்மானித்துள்ளது.
இரு தரப்பு உறவுகள் தொடர்பிலான முரண்பாடுகளை களையும் நோக்கில் இவ்வாறு பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஐரோப்பிய ஒன்றியத்தினால் முன் வைக்கப்பட்ட சில பரிந்துரைகளை சுவிட்சர்லாந்து முற்று முழுதாக நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நெகிழ்வுத்தன்மையை பின்பற்றத் தவறியதாக இரண்டு தரப்புக்களும் பரஸ்பர குற்றச்சாட்டுக்களை சுமத்திக் கொண்டதனால் அடுத்த கட்ட நகர்வுகள் ஸ்தம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான ஓர் பின்னணியில் இரு தரப்புகளுக்கும் இடையிலான முரண்பாடுகளை களைந்து இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்வதில் சுவிட்சர்லாந்து அரசாங்கம் தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளது.