ஐரோப்பிய ஒன்றியத்துடன் எரிசக்தி தொடர்பில் உடன்படிக்கைகள் ஏற்படுத்திக் கொள்ளப்பட மாட்டாது என சுவிட்சர்லாந்தின் எரிசக்தி அமைச்சர் ஆல்பர்ட் ராஷ்டி தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்துடன் எந்த ஒரு மின்சார உடன்படிக்கையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.
அமைச்சரவையில் இது தொடர்பில் எந்தவிதமான இணக்கப்பாடும் ஏற்படுத்திக் கொள்ளவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் மின்சார கட்டமைப்பிற்குள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் பிரத்தியேகமாக இணைக்கப்பாடுகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது என தெரிவித்துள்ளார்.
புதுப்பிக்கத்தக்க மின்சார உற்பத்தியை அதிகரிப்பதன் ஊடாக நாட்டின் மின்சார தேவையை பூர்த்தி செய்து கொள்ள முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
குறிப்பாக சூரிய சக்தி, காற்றாலைகள் மற்றும் நீர் மின்சக்தி என்பனவற்றின் ஊடாக அதிக அளவு மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு முனைப்பு காட்டப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் இவ்வாறான புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி நிலையங்களை உருவாக்குவதற்கு குறிப்பிட்ட அளவு காலம் தேவைப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.