ஐரோப்பிய விமானப் பயணிகளுக்கு விசேட அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
விமானப் பயணங்களை மேற்கொள்வோர் முன்கூட்டியே விமான நிலையங்களுக்கு வருகை தருமாறு கோரப்பட்டுள்ளது.
ஆளணி வளப் பற்றாக்குறை காரணமாக ஐரோப்பிய விமான நிலையங்களில் நெரிசல் நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
சர்வதேச விமான நிலையப் பேரவையின் ஐரோப்பிய கிளைத் தலைவர் ஒலிவர் ஜான்கோவெக் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
விமான நிலையங்களுடன் பயணிகள் தொடர்பு கொண்டு எப்பொழுது வருகை தர வேண்டும் என்பதனை அறிந்து கொள்வது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக பொதிகளுடன் செல்லும் பயணிகள் முன்கூட்டியே விமான நிலையங்களுக்கு செல்வதன் மூலம் தேவையற்ற தாமதங்களை தவிர்த்துக் கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.