பெருந்தொற்று நிலைமைகளுக்கு மத்தியில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் வீடுகளில் இருந்து பணியாற்றவும் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் நேரிட்டுள்ளது.
இவ்வாறான ஓர் பின்னணியில் கணனியில் ஒன்றுக்கும் மேற்பட்ட web browser கள் பயன்படுத்துவது மிகவும் பொருத்தமானது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஒரே கணனியை ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் பயன்படுத்தினாலோ ஒரே நபர் ஒன்றுக்கும் மேற்பட்ட பணிகளை மேற்கொண்டாலோ தனித் தனி web browserகள் பயன்படுத்துவது பொருத்தமானது.
உதாரணமாக தொழில்களுக்காக ஒரு ப்ரவுசரையும், தனிப்பட்ட தேவைகள் குறிப்பாக சமூக ஊடகப் பயன்பாடு என்பனவற்றுக்கு தனியான ப்ரவுசர்களையும் பயன்படுத்திக் கொள்வது மிகவும் பொருத்தமானது என தொழில்நுட்பவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஏனெனில் தொழில்களில் ஈடுபடும் போது அதற்கான ஒர் தனியான கடவுச் சொற்கள் இணைய முகவரிகள் என்பன காணப்படும் என்பதுடன் தனிப்பட்ட சமூக ஊடக கணக்குகளுக்கு தனியான கடவுச் சொற்கள் மற்றும் இணைய முகவரிகள் காணப்படுகின்றது.
உதாரணமாக தொழில் நிமித்தமான பணிகளுக்கு க்ரோம் ப்ரவுசரையும் தனிப்பட்ட சமூக ஊடகப் பயன்பாட்டுக்கு மொஸிலா ப்ரவுசரையும் பயன்படுத்த முடியும்.
நீங்கள் Google Chrome, Microsoft Edge, Mozilla Firefox, போன்ற எந்தவொரு ப்ரவுசரையும் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
எளிமையாக கூறினால் ஒவ்வொரு குறிப்பிட்ட இணைய பயன்பாட்டுக்கும் தனியானதொரு ப்ரவுசர்களையும் பயன்படுத்துவது எளிதாக இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.