Search

Menu

Keeping you Informed News and Views..

ஒரே சூலில் 10 குழந்தைகள் : தென் ஆபிரிக்கப் பெண் உலக சாதனை

7 ஆண் குழந்தைகளும், 3 பெண் குழந்தைகளும் பிறந்துள்ளன. தாயும், குழந்தைகளும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒரே சூலில் 10 குழந்தைகள் : தென் ஆபிரிக்கப் பெண் உலக சாதனை

தென் ஆபிரிக்காவைச் சேர்ந்த 37 வயது பெண் ஒருவர் ஒரே சூலில் 10 குழந்தைகளைப் பெற்றுள்ளார். இதனையடுத்து ஒரே சூலில் அதிக பிள்ளைகளைப் பெற்ற பெண் என்ற உலக சாதனையை அவர் தன்வசப்படுத்தியுள்ளார்.

தென் ஆபிரிக்காவைச் சேர்ந்த கோஷியாமி தமாரா சித்தோல் என்ற பெண்ணே 10 குழந்தைகளைப் பெற்றுள்ளார். ஏற்கனவே இந்தத் தம்பதிக்கு இரட்டைகள் குழந்தைகள் உள்ளன.

கடந்த 7ஆம் திகதி பிிரிட்டோரியா நகரில் உள்ள மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட அவர், சிசேரியன் மூலம் குழந்தைகளைப் பெற்றெடுத்தார்.

7 ஆண் குழந்தைகளும், 3 பெண் குழந்தைகளும் பிறந்துள்ளன. தாயும், குழந்தைகளும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கு முன்னர் மாலி நாட்டைச் சேர்ந்த ஹலிமா சிசி என்ற 25 வயது இளம பெண் கடந்த மே மாதம் ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகளைப் பெற்றிருந்தார்.

இது உலக சாதனையாக கருதப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்த சாதனையை தென் ஆபிரிக்கப் பெண் தன்வசப்படுத்தியுள்ளார்.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

Search here