Search

Menu

Keeping you Informed News and Views..

ஒலிம்பிக் விளையாட்டு விழா – புகைப்படத் தொகுப்பு

தொடக்க விழாவில் ஆயிரத்துக்கும் குறைவான சில முக்கிய நபர்களே கலந்து கொண்டனர்.

ஒலிம்பிக் விளையாட்டு விழா – புகைப்படத் தொகுப்பு

ஜப்பானின் டோக்கியோ நகரில் ஒலிம்பிக் போட்டிகளுக்கான ஆரம்ப விழா இன்று நடைபெற்றது. சுமார் நான்கரை மணி நேரம் தொடக்க விழா வண்ணமயமாக, பார்வையாளர்கள் இன்றி நடைபெற்றது.

முன்னேறிச் செல்வோம், உணர்வால் இணைவோம் என்ற தலைப்பில் நடத்தப்பட்ட ஆரம்ப விழாவை ஜப்பான் நாட்டு பேரரசர் நருஹிடோ தொடக்கி வைத்தார்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு நாடுகளின் வீரர்கள் அனைவரையும் அணிவகுப்பில் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை.

ஆரம்ப விழாவில் மிக முக்கிய விருந்தனர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

மொத்தம் 33 போட்டிப் பிரிவுகளில் 339 தங்கப் பதக்கங்களுக்காக 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீர, வீராங்கனைகள் பங்குபெற்றுள்ளனர்.

இதேவேளை, ஜப்பான் எங்களுக்குப் பொருத்தமானதாக இருக்கிறது என்று சுவிசர்லாந்தின் ஒலிம்பிக் குழுத் தலைவர் தெரிவித்துள்ளார்.

2016ஆம் ஆண்டு பிரேசில் ரியோ நகரில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் சுவிசர்லாந்து பதக்கப் பட்டியலில் 24ஆவது இடத்தைப் பிடித்துக் கொண்டது.

சுவிசர்லாந்து 2016ஆம் ஆண்டு மூன்று தங்கப் பதக்கங்கள், இரண்டு வெள்ளி, இரண்டு வெண்கலப் பதக்கங்கள் என மொத்தமாக ஏழு ஒலிம்பிக் பதக்கங்களை சுவீகரித்துக் கொண்டது.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

ஒலிம்பிக் விளையாட்டு விழா – புகைப்படத் தொகுப்பு

தொடக்க விழாவில் ஆயிரத்துக்கும் குறைவான சில முக்கிய நபர்களே கலந்து கொண்டனர்.

ஒலிம்பிக் விளையாட்டு விழா – புகைப்படத் தொகுப்பு

Search here