Search

Menu

Keeping you Informed News and Views..

ஓய்வூதிய திட்டம் தொடர்பில் வாக்கெடுப்பு

அண்மையில் ஓய்வூதியத் திட்டத்தில் திருத்தங்களைச் செய்யும் நோக்கில் நடாத்தப்பட்ட வாக்கெடுப்பு வெற்றியளிக்கவில்லை.

ஓய்வூதிய திட்டம் தொடர்பில் வாக்கெடுப்பு

சுவிட்சர்லாந்தில் ஓய்வூதியத் திட்ட மறுசீரமைப்பு தொடர்பில் வாக்கெடுப்பு நடாத்தப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஓய்வு பெறும் ஆண்களின் வயதெல்லையை 65 ஆகவும், பெண்களின் வயதெல்லையை 66 ஆகவும் உயர்த்துவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

பின்னர் இது நாட்டின் ஆயுட் காலத்தின் அடிப்படையில் திருத்தங்களைச் செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. உலகின் பல நாடுகளில் ஓய்வு பெறும் வயதெல்லை அதிகரிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் ஓய்வூதியத் திட்டத்தில் திருத்தங்களைச் செய்யும் நோக்கில் நடாத்தப்பட்ட வாக்கெடுப்பு வெற்றியளிக்கவில்லை. இந்த நிலையில் மீண்டும் வாக்கெடுப்பு நடாத்தி ஓய்வூதியத் திட்டத்தை திருத்தி அமைக்க வேண்டுமென கோரப்பட்டுள்ளது.

centre-right Radical-Liberal கட்சியின் இளைஞர் அணியினால் இந்த ஓய்வூதிய திருத்தங்கள் குறித்த முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

2032 ஆம் ஆண்டில் ஓய்வு பெறும் ஆண்களின் வயது எல்லையை 65 ஆகவும், பெண்களின் வயது எல்லையை 66 ஆகவும் உயர்த்துமாறு கோரி இந்த முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 145,000 பேரின் கையொப்பங்களுடன் இந்த முன்மொழிவுகள் வாக்கெடுப்பு நடாத்தும் நோக்கில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

ஒய்வூதியம் குறித்த முன்மொழிவுகள் நாடாளுமன்றில் பேசப்பட்டால் சில காலத்திற்கு மட்டுமே அது நடைமுறையில் இருக்கும் எனவும் பின்னர் பிரச்சினைகள் ஏற்படும் எனவும் இந்த ஓய்வூதிய மறுசீரமைப்பு முன்மொழிவுக்குழுவின் தலைவர் பெட்ரிக் எயுக்ஸ்டர் தெரிவித்துள்ளார்.

பேண்தகு தீர்வுத் திட்டமொன்று அவசியம் எனவும், மக்கள் நீண்ட காலம் வாழ்ந்தால் அவர்கள் சற்றே அதிக காலம் பணியாற்ற வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார். ஓய்வு பெற்றுக் கொள்ளும் வயதெல்லை குறித்து ஐந்து ஆண்டுகளுக்கு முன்னதாகவே அறிவிக்க வேண்டுமெனவும் அப்போது திட்டமிடல்களை மேற்கொள்ள முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்த பரிந்துரைகள் பெண்களுக்கு பாதகமானது என சிலர் விமர்சனங்களை வெளியிட்டுள்ளனர். ஓய்வூதிய மறுசீரமைப்பு பரிந்துரைகள் செல்வந்தர்களுக்கு பொருத்தமானது என்ற போதிலும் நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் உடையவர்களுக்கு பொருத்தாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த முன்மொழிவுகள் அதிக வயதுடையவர்கள் வேலையற்றவர்களாகவும், மாற்று திறனாளிகளாகவும் தங்களை பதிவு செய்து கொள்ள வழியமைக்கும் என தெரிவித்துள்ளனர்.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

ஓய்வூதிய திட்டம் தொடர்பில் வாக்கெடுப்பு

அண்மையில் ஓய்வூதியத் திட்டத்தில் திருத்தங்களைச் செய்யும் நோக்கில் நடாத்தப்பட்ட வாக்கெடுப்பு வெற்றியளிக்கவில்லை.

ஓய்வூதிய திட்டம் தொடர்பில் வாக்கெடுப்பு

Search here