கடவுச்சீட்டு பெற்றுக் கொள்வதற்காக முன்பதிவு செய்தவர்களுக்கு விசேட அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் திங்கட்கிழமை (26) குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தலைமை அலுவலகத்தில் கடவுச்சீட்டு பெறுவதற்கான திகதி மற்றும் நேரத்தைப் பெற்றுள்ள அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் முக்கிய அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
திங்கட்கிழமை (26) அரசு விடுமுறை என்பதால், அன்றைய தினம் பிரதான அலுவலகம் மூடப்பட்டு, விண்ணப்பதாரர்களுக்கு மற்றொரு நாள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய திகதி மற்றும் நேரம் என்பன தொலைபேசி மூலம் விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.