Search

Menu

Keeping you Informed News and Views..

கொரோனா வைரஸ்: சுவிட்சர்லாந்தின் தற்போதைய நிலைமை

ஜூலை தொடக்கத்தில் இருந்து, டெல்டா மாறுபாட்டின் விரைவான பரவலுக்கு மத்தியில் தொற்று விகிதம் அதிகரிக்கத் தொடங்கியது.

கொரோனா வைரஸ்: சுவிட்சர்லாந்தின் தற்போதைய நிலைமை

கொவிட் தொற்று புள்ளிவிவரங்கள் பல வாரங்களாக வீழ்ச்சியடைந்து வந்த நிலையில், டெல்டா மாறுபாட்டின் விரைவான பரவலால் தொற்று எண்ணிக்கை தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

புதிய தொற்றாளர் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் குறைவாக இருந்தாலும், டெல்டா மாறுபாட்டின் விரைவான பரவலால் ஜூலை நடுப்பகுதியில் 71% புதிய தொற்றுக்கள் பதிவாகியுள்ளன.

தடுப்பூசி வழங்கும் செயற்பாடு நாடு முழுவதும் தொடர்கின்ற போதும் ஒரு நாளைக்கு 60,000 ஆக குறைந்துவிட்டது. டிசம்பர் பிற்பகுதியிலிருந்து ஜூலை 11 வரை 8.1 மில்லியன் அளவு தடுப்பூசிகள் போடப்பட்டன. நாட்டின் மொத்த சனத்தொகையில் 42% ஆனோருக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

பெப்ரவரி முதல் ஏப்ரல் வரை, சுவிட்சர்லாந்தில் புதிய வைரஸ் வகைகள் தோன்றியதன் மூலம் தொற்று விகிதம் உயர்ந்தது. புதிய தொற்றாளர் எண்ணிக்கை பின்னர் குறையத் தொடங்கியது. அக்டோபர் 2020 க்குப் பிறகு முதல் முறையாக புதிய நோய்த்தொற்றுகள் 1,000 க்கும் குறைவாகக் காணப்பட்டன. இந்த கீழ்நோக்கிய போக்கு ஜூன் இறுதி வரை தொடர்ந்தது, சராசரியாக புதிய தினசரி தொற்றுகள் 200 க்கும் குறைவாக இருந்தன. இவ்வாறு கொவிட் புள்ளிவிவரங்கள் வீழ்ச்சியடைந்துவந்த நிலையில், ஜூலை தொடக்கத்தில் இருந்து, டெல்டா மாறுபாட்டின் விரைவான பரவலுக்கு மத்தியில் தொற்று விகிதம் அதிகரிக்கத் தொடங்கியது.

இந்த கோடை காலத்திற்குள் ஆறு மில்லியன் மக்களுக்கு (அல்லது 70% மக்கள்) தடுப்பூசி போடுவதற்கான இலக்கை அரசாங்கம் நிர்ணயித்துள்ளது. சுவிட்சர்லாந்தில் தடுப்பூசி கட்டாயப்படுத்தப்படவில்லை. இந்தத் திட்டத்தில் தினமும் 70,000 தடுப்பூசிகள் வரை போடப்படுகின்றன.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

கொரோனா வைரஸ்: சுவிட்சர்லாந்தின் தற்போதைய நிலைமை

ஜூலை தொடக்கத்தில் இருந்து, டெல்டா மாறுபாட்டின் விரைவான பரவலுக்கு மத்தியில் தொற்று விகிதம் அதிகரிக்கத் தொடங்கியது.

கொரோனா வைரஸ்: சுவிட்சர்லாந்தின் தற்போதைய நிலைமை

Search here