முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் வீசா காலத்தை நீடிக்குமாறு இலங்கை அரசாங்கம் கோரியுள்ளது.
சிங்கப்பூர் அரசாங்கத்திடம்,இலங்கை அரசாங்கம் கோரியுள்ளது.
எதிர்வரும் 11ம் திகதியுடன் கோட்டாபயவின் வீசா காலம் நிறைவடைகின்றது.
இந்த நிலையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் வீசா காலத்தை மேலும் 14 நாட்களுக்கு நீடிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் கோரியுள்ளது.
எனினும்,இந்தக் கோரிக்கை தொடர்பில் சிங்கப்பூர் அரசாங்கம் இதுவரையில் எவ்வித பதிலும் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.