சுவிட்சர்லாந்தில் கோவிட் சான்றிதழ்களை எதிர்வரும் 2023ம் ஆண்டு வரையில் நீடிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் சுகாதார அமைச்சர் எலொய்ன் பீரெஸ்ட் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
கோவிட் சான்றிதழ் நடைமுறையை எதிர்வரும் ஆண்டு வரையில் நீடிக்குமாறு அவர் நாடாளுமன்றில் கோரியுள்ளார்.
இன்னமும் கோவிட் சான்றிதழைக் கோரும் நாடுகளுக்கு பயணம் செய்யும் சுவிட்சர்லாந்து வாழ் பிரஜைகள் சான்றிதழ் இன்றி அந்த நாடுகளுக்கு பயணம் செய்ய முடியாது என சுட்டிக்காட்டியுள்ளார்.
சுவிட்சர்லாந்தில் நிறைவேற்றப்பட்ட கோவிட்19 சட்டத்தில் இந்த ஆண்டு வரைக்குமே கோவிட் சான்றிதழின் செல்லுபடியாகும் காலம் வரையறுக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டுப் பயணங்களை கருத்திற் கொண்டு கோவிட் சட்டத்தில் சில திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமென சுகாதார அமைச்சர் பீரெஸ்ட் வலியுறுத்தியுள்ளார்.