கோவிட்19 பெருந்தொற்று தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனம் விசேட தீர்மானம் ஒன்றை அறிவித்துள்ளது.
கோவிட்19 வைரஸ் தொற்று தொடர்ந்தும் உலக அவசர நிலைமையாக கருதப்பட முடியாது என உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது.
எதிர்வரும் ஜனவரி மாதம் இந்த விடயம் குறித்து கலந்தாலோசிக்க உள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானம் தெரிவித்துள்ளார்.
தற்பொழுது கோவிட் தொற்று பரவுகை குறைவடைந:துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கோவிட் மரணங்கள் பதிவாகும் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும், தடுப்பூசி ஏற்றிக் கொள்ளாதவர்கள் உயிரிழப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
உலகில் 30 வீதமான மக்கள் எந்தவொரு கோவிட் தடுப்பூசியையும் பெற்றுக்கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
சீனாவைத் தவிர்ந்த வேறு நாடுகளில் கோவிட் தொற்று பரவுகை தீவிர நிலையில் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.