Search

Menu

Keeping you Informed News and Views..

கோவிட் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது இறப்பர் தோட்டா பிரயோகம்

சுவிட்சர்லாந்தின் தலைநகர் பேர்னில் கோவிட் கட்டுப்பாடுகளுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது இறப்பர் தோட்ட பிரயோகம் நடாத்தப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்து பொலிஸார் போராட்டக்காரர்கள் மீது இறப்பர் தோட்டா மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

அனுமதியின்றி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அரசாங்கத்தின் கோவிட் கட்டுப்பாடுகளை எதிர்த்து சுமார் 800க்கும் மேற்பட்டவர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றிருந்தனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

போராட்டத்தில் பங்கேற்றிருந்த 13 பேர் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கிளர்ச்சியில் ஈடுபட்டமை மற்றும் அதிகாரிகளை அச்சுறுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் இந்த கைது செய்யப்பட்டவர்களின் மீது சுமத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கடந்த வாரமும் பேர்ன் நகரில் சுமார் நான்காயிரம் பேர் வரையில் போராட்டங்களில் ஈடுபட்டிருந்தனர் என்பதுடன் இந்தப் போராட்டமும் வன்முறையில் முடிந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

சுதந்திரம் என்ற கோஷத்தை எழுப்பிய வண்ணம் போராட்டக்காரர்கள் வீதியில் பேரணியாக சென்றிருந்தனர்.

சில போராட்டக்காராகள் பூக்களை ஏந்தி போராட்டத்தில் பங்குபற்றியிருந்த போதிலும், சிலர் பொலிஸார் மீது பொருட்கள் வீசி எறியப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நாடாளுமன்ற கட்டடம் நோக்கி முன்னேற முற்பட்ட போராட்டக்கார்ர்கள் மீது பொலிஸார் நீர்த்தாரை மற்றும் இறப்பர் தோட்டா பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் யார், பொருட்களை கொள்வனவு செய்ய வந்தவர்கள் யார் என்பதனை கண்டறிந்து கொள்வதில் சிக்கல் நிலை உருவானது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

Search here