Search

Menu

Keeping you Informed News and Views..

சரிவை சந்தித்த சுவிட்சர்லாந்தின் தேன் உற்பத்தி

இம்முறை சுவிட்சர்லாந்தில் தேனுக்கு தட்டுப்பாடு நிலவும் என்றும், விலை அதிகரிக்கும் என்றும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.

சரிவை சந்தித்த சுவிட்சர்லாந்தின் தேன் உற்பத்தி

குறுகிய வசந்த காலம் மற்றும் மழையுடனான கோடை காலம் என்பதால் சுவிஸ் தேனீக்கள் வழக்கத்தை விட பத்து மடங்கு குறைவான தேனையே உற்பத்தி செய்துள்ளன. இதன் விளைவாக தேனின் விலை அதிகரிப்பதற்கான ஏதுநிலை உருவாகியுள்ளது.

கடந்த ஆண்டின் விதிவிலக்கான தேன் உற்பத்தியுடன் ஒப்பிடும்போது 2021 உற்பத்தி மிகவும் அற்பமாகக் கருதப்படுகிறது.ஒரு தேன்கூடு பொதுவாக 15-20 கிலோ தேனை உற்பத்தி செய்யும் நிலையில், ​​தற்போது அது 0-3 கிலோவாகக் குறிந்துள்ளதாக சுவிஸ் பொது வானொலி RTS வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

தேன் பற்றாக்குறைக்கு முக்கிய காரணம் வானிலை ஆகும். இது வசந்த கால முதல் அறுவடை, இரண்டாவது அறுவடைக்கு மிகவும் பாதகமானது என்று சுவிட்சர்லாந்தின் தேனீ வளர்ப்பு சங்கத்தின் தலைவர் Francis Saucy தெரிவித்தார்.

அதிக மழைவீழ்ச்சியால் தேனீக்களுக்கு தேன் சேகரிப்புக்கு மிகக் குறைவான நேரமே வாய்த்ததாகவும், பூக்கள் மற்றும் மரங்களில் மிகக் குறைந்தளவே தேன் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஆகவே இம்முறை சுவிட்சர்லாந்தில் தேனுக்கு தட்டுப்பாடு நிலவும் என்றும், விலை அதிகரிக்கும் என்றும் எதிர்வுகூறப்பட்டுள்ளது. ஒரு கிலோ தேனின் விலை CHF25-30 வரையாகும் என்றும் கூறப்படுகிறது.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

Search here