Search

Menu

Keeping you Informed News and Views..

சர்வதேச ஊடகங்களின் பார்வையில் நினைவேந்தல்கள் 

இலங்கையில் தமிழ் மக்களினால் முன்னெடுக்கப்பட்ட யுத்த நினைவேந்தல் நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சர்வதேச ஊடகங்களின் பார்வையில் நினைவேந்தல்கள் 

இலங்கையில் தமிழ் மக்களினால் முன்னெடுக்கப்பட்ட யுத்த நினைவேந்தல் நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த ஆண்டில் மாவீரர் தின அனுஸ்டிப்புக்களை மேற்கொண்ட தமிழ் மக்களுக்கு அரசாங்கப் படையினர் இடையூறு விளைவித்தனர் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சில தசாப்தங்களாக இடம்பெற்ற யுத்தத்தில் உயிர்நீத்த உறவுகளுக்காக சுடர் எந்தி நினைவேந்தல்களை செய்ய படையினர் அனுமதிக்கவில்லை என மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

சிவிலியன்கள் நினைவேந்தல்களில் ஈடுபட அனுமதிக்கப்படவில்லை எனவும் யுத்தம் இடம்பெற்ற வலயங்களில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டதகாவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக கல்லறைகளில் சுடர் ஏற்றி நினைவஞ்சலி செலுத்துவதற்கு உறவினர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை என சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

முல்லைத்தீவில் நினைவேந்தல்களில் ஈடுபட்ட மக்களுக்கு படையினர் இடையூறு விளைவித்ததுடன், தமிழ் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

முள் கம்பிகளினால் சுற்றப்பட்ட தடிகளைப் பய்னபடுத்தி ஊடகவியலாளர்களை தாக்கியதாக புகைப்பட ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதல் சம்பவம் குறித்து முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் முல்லைத்தீவு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

1972ம் ஆண்டு முதல் 37 ஆண்டுகள் இலங்கையில் யுத்தம் நீடித்து வந்தது என தெரிவிக்கப்படுகின்றது.

1980களின் கடைகூற்றிலிருந்து நவம்பர் மாதம் 27ம் திகதி மாவீரர் தின நிகழ்வுகள் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படக்கூடாது என அரசாங்கம் தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரிவிணைவாத யுத்தம் காரணமாக குறைந்தபட்சம் ஒருலட்சம் பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என ஐக்கிய நாடுகள் அமைப்பு மதிப்பீடு செய்துள்ளது.

யுத்தத்தின் போது 40000 சிவிலியன்கள் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு குற்றம் சுமத்தி வரும் நிலையில், ஆட்சிக்கு வரும் இலங்கை அரசாங்கங்கள் இந்தக் குற்றச்சாட்டை நிராகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

Search here