Search

Menu

Keeping you Informed News and Views..

சீனாவின் பொறிக்குள் மெல்ல சிக்கிவரும் இலங்கை?

நாம் தற்போது சீனாவின் மின்சாரப் பொறிக்கும் சிக்கியுள்ளோம்.

சீனாவின் பொறிக்குள் மெல்ல சிக்கிவரும் இலங்கை?

ண்ணீருக்காக தெற்கு – தென்கிழக்காசிய நாடுகளை பணயக் கைதிகளாக சீனா வைத்துள்ளதாக ஹார்வர்ட் சர்வதேச கல்வி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தனது உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் இதனைப் பதிவிட்டுள்ளது.

போராசிரியர் பெட்ரிக் மென்டிஸ், கலாநிதி அன்டோனியா லுஷிகிவிக்ஸ் ஆகியோரினால் இந்த ஆய்வு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

ஹார்வட் கல்வி நிறுவனத்தின் முழுமையான ஆய்வறிக்கை

குறித்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய விபரங்கள் :

திபெத்திய பள்ளத்தாக்கு தொடங்கி பிரம்மபுத்ரா, இரவாடி, மீகோம் நதிகளுக்கு குறுக்கே அணைகளைக் கட்டுவதன் மூலம் சீனா ஏற்கனவே தண்ணீரை சேகரித்து வருகிறது.

அவர்கள் விரும்பும் அளவுக்கு நீரை சேகரித்து, தேவைப்படும் போது நீரை கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு விடுவிக்க முடியும்.

சீனாவின் இந்த திட்டத்தினால் குறித்த கங்கைகளின் கீழ் பகுதியில் உள்ள மக்களுக்கு நீர் இல்லாமல் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு நீர் தேவைப்பட்டால் அதனை சீனாவில் இருந்து பெற்றுக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

சீனாவின் இந்த செயற்பாட்டினால் உலக சனத்தொகையில் அரைவாசி மக்கள் வாழும் தெற்கு – தென்கிழக்காசிய நாடுகளின் மக்கள் சீனாவின் பிடிக்குள் சிக்கியுள்ளனர்.

இந்த செயன்முறை சீனாவின் ‘அச்சுறுத்தி நீரைப் பறிக்கும் பொறிமுறை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கம்போடியா, வியட்னாம், லாவோஸ், மியன்மார், தாய்லாந்து ஆகிய நாடுகள் தற்போதும் இந்த நிலைக்கு ஆளாகியுள்ளன. இந்தியாவும் படிப்படியாக அந்தப் பொறிக்குள் சிக்கி வருகிறது.

இலங்கையும் படிப்படியாக சீனாவின் பொறிக்குள் சிக்கி வருகிறதா?

யுனொஸ்கோவினால் அங்கீகரிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட வேண்டும் என்று பெயரிடப்பட்டுள்ள சிங்கராஜ வனம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் சுத்தமான நீர் நிலைகள் காணப்படுகின்றன.

சிங்கராஜ வனத்திலிருந்து ஊற்றெடுக்கும் பிரதான மூன்று கங்கைகளை மறித்து இரண்டு நீர்த்தேக்கங்களை அமைப்பதன் மூலம் சீனா சுத்தமான குடிநீரை தமது காட்டுப்பாட்டிற்குள் வைத்தருக்க முயற்சிக்கின்றதா எனும் சந்தேகம் எழுகின்றது.

சிங்கராஜ வனத்தின் நீரேந்து பகுதி எமக்கு இல்லாமல் போனால், அதன் மூலம் அந்தப் பகுதியில் மாத்திரம் அல்ல, முழு நாட்டடிலும் நீர் மூலங்களுக்கு பாதிப்பு ஏற்படும்.

நாம் தற்போது சீனாவின் மின்சாரப் பொறிக்கும் சிக்கியுள்ளோம்.

நாட்டில் மின்சார விநியோகத்தில் அதிகளவிலான பங்கை வகிக்கும் நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தை சீனாவின் நிறுவனம் ஒன்றே அமைத்தது.

இன்றும் அதன் திருத்தப் பணிகள் மற்றும் செயற்படுத்தும் நடவடிக்கைகளை சீனாவே மேற்கொண்டு வருகின்றது.

பல சந்தர்ப்பங்களில் இந்த மின் உற்பத்தி நிலையத்தின் மின் விநியோகம் தடைப்பட்டதுடன், நிலக்கரி மூலம் சுற்றாடலுக்கு ஏற்படும் பாதிப்புகளும் அதிகமாகும்.

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தினால் நாட்டின் பொருளாதாரத்திற்கு விடுக்கும் அழுத்தம் தற்போது எம்மால் தடுக்க முடியாத நிலைமைக்கு வலுவடைந்துள்ளது

நீர் தொடர்பிலும் இந்த நிலை ஏற்படப் போகிறது.

– நன்றி நியூஸ் ஃபெஸ்ட்

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

சீனாவின் பொறிக்குள் மெல்ல சிக்கிவரும் இலங்கை?

நாம் தற்போது சீனாவின் மின்சாரப் பொறிக்கும் சிக்கியுள்ளோம்.

சீனாவின் பொறிக்குள் மெல்ல சிக்கிவரும் இலங்கை?

Search here