சீரற்ற காலநிலை காரணமாக இலங்கையில் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்க பாடசாலைகள் மற்றும் அரசாங்க அங்கீகாரம் பெற்றுக்கொண்ட பாடசாலைகளுக்கு நாளை விசேட விடுமுறை வழங்கப்பட உள்ளது.
கல்வி அமைச்சினால் வளிமண்டலவியல் திணைக்களம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் என்பனவற்றிடம் கருத்துக்களை கேட்டறிந்து கொண்டதன் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
வளி மாசடைந்திருப்பதாகவும் கடுமையான குளிர் நிலவி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் நாளை அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.