Search

Menu

Keeping you Informed News and Views..

சுற்றுலாத்துறை வருமானத்தை இழக்கும் ஆபத்தில் இலங்கை

இலங்கை அரச அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் அசமந்த போக்கினால் சுற்றுலாத்துறையின் மூலம் ஈட்டபடக்கூடிய வருமானத்தை இழக்கும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளது.

சுற்றுலாத்துறை வருமானத்தை இழக்கும் ஆபத்தில் இலங்கை

இலங்கை அரச அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் அசமந்த போக்கினால் சுற்றுலாத்துறையின் மூலம் ஈட்டபடக்கூடிய வருமானத்தை இழக்கும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளது.

நவம்பர் மாதத்தில் இலங்கையில் சுற்றுலாப் பருவ காலம் ஆரம்பிக்கின்றது.

எனினும் இந்த ஆண்டில் கடந்த ஆண்டைப் போன்றே ரஸ்யா மற்றும் உக்ரேய்னைத் தவிர்ந்த சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, அஸ்திரியா உள்ளிட்ட மேலும் பல ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் வருகையை எதிர்பார்க்க முடியாத நிலை உருவாகியுள்ளது.

நாட்டுக்கு வருகை தந்து 24 முதல் 48 மணித்தியாலங்கள் வரையில் ஹோட்டலில் தனிமைப்படுத்தப்படுவதனை சுற்றுலாப் பயணிகள் விரும்பவில்லை.

இரண்டு தடவைகள் தடுப்பூசி ஏற்றிக் கொண்டு அந்த சான்றிதழுன் வருகை தரும் தங்களுக்கு இவ்வாறான தனிமைப்படுத்தல் நடைமுறை அவசியமற்றது என சுற்றுலாப் பயணிகள் கருதுகின்றனர்.

இவ்வாறு இலங்கை புறப்படுவதற்கு 72 மணித்தியாலங்களுக்குள் கோவிட் பரிசோதனை நடத்தி நோய்த் தொற்று இல்லை என்பதனை உறுதிப்படுத்தியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கு வந்து 24 முதல் 48 மணித்தியாலங்கள் தனிமைப்படுத்தப்படுவதனை சுற்றுலாப் பயணிகள் விரும்பவில்லை, அவர்கள் நேரடியாக தங்களின் விருப்பமான ஹோட்டலுக்கு செல்லவே விரும்புகின்றார்கள்.

பண்டாரநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியேறியதும் தமக்கு விருப்பமான இடத்திற்கு செல்லும் சுதந்திரம் இருக்க வேண்டுமென அவர்கள் கருதுகின்றனர்.

துரதிஸ்டவசமாக இந்த சுதந்திரம் இலங்கைக்குள் பிரவேசிக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கு கிடையாது.

நிலை 1 என வகையீடு செய்யப்பட்ட ஹோட்டல்களில் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக அவர்கள் விரும்பவில்லை, இந்த ஹோட்டல் கட்டணங்கள் அதிகமாகும்.

தேவையற்ற வகையில் பணத்தை விரயமாக்க ஐரோப்பிய சுற்றுலாப் பயணிகள் விரும்பவில்லை.

இதனால் ஸன்ஸிபார், கிரேக்க தீவுகள், ஷர்ம் எல் சேக் போன்ற நாடுகளுக்கு செல்ல ஐரோப்பிய சுற்றுலாப் பயணிகள் விரும்புகின்றனர். ஏனெனில் தடுப்பூசி சான்றிதழ் இங்கு ஏற்றுக் கொள்ளப்படுவதுடன் விமான நிலையத்திலிருந்து வெளியேறியதும் தமக்கு விருப்பமான இடத்திற்கு செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

தனிமைப்படுத்தலுக்கு உட்படாமல் தாங்கள் விரும்பிய இடத்திற்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல சந்தர்ப்பம் வழங்கப்படுகின்றது.

விமான நிலையத்திற்குள் பிரவேசிக்கும் சுற்றுலாப் பயணிகளை உடனடியாகவே பீ.சீ.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தி அவர்களுடன் தொலைபேசி இலக்கங்கள் உள்ளிட்ட தொடர்பு விபரங்களை திரட்டிக் கொண்டு, தனிமைப்படுத்தப்படாது அவர்கள் விரும்பிய ஹோட்டலுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும்.

இலங்கையில் இருக்கும் வரையில் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டுமென சுற்றுலாப் பயணிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட முடியும்.

முழுமையாக தடுப்பூசி ஏற்றப்பட்ட சுற்றுலாப் பயணிகளினால் கோவிட் தொற்று பரவும் ஆபத்து குறைவானது எனபதுடன் அதை விடவும் இலங்கையில் தடுப்பூசி ஏற்றப்படாத மக்களினால் நோய்த் தொற்று காவும் ஆபத்து அதிகமானதாகும்.

பண்டாரநாயக்க விமான நிலையத்தில் நாள் ஒன்றுக்கு 4500 பேருக்கு பீ.சீ.ஆர் பரிசோதனை நடாத்தி 90 நிமிடங்களில் பரிசோதனை முடிவுகளை வெளியிட முடியும் என மருத்துவ ஆய்வுகூட ஒன்றியத்தின் தலைவர் ரவி குமுதேஷ் குறிப்பிடுகின்றார்.

சுகாதார அமைச்சின் அனுமதியின்மையினால் இந்த ஆய்வு கூடம் இதுவரையில் இயங்கத் தொடங்கவில்லை என அவர் குற்றம் சுமத்துகின்றார்.

சுகாதார அமைச்சின் சில அதிகாரிகள் தனியார் ஆய்வு கூடங்களின் ஊடாக ஈட்டும் வருமானம் இல்லாமல் போகும் என்ற காரணத்திற்காக இந்த அனுமதி வழங்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமைச்சின் அதிகாரிகள் சிலருக்கு ஹோட்டல் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுடன் தொடர்பு உண்டு என தகவல்கள் கிடைத்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான நடவடிக்கைகளினால் சுற்றுலாப் பயணத்துறை பெரும் பாதிப்பை எதிர்நோக்கும் என்பதுடன் சுற்றுலாத்துறை தொழிலில் ஈடுபட்டுள்ள பலர் வருமானத்தை இழந்துள்ளனர்.

உக்ரேய்ன், ரஸ்யா, இந்தியா மற்றும் சில மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு தனிமைப்படுத்தல் அவசியம் என்ற போதிலும் ஐரோப்பிய நாடுகளின் பயணிகளுக்கு அது அவசியமில்லை.

The Swiss Edelweiss விமான சேவை நிறுவனம் நவம்பர் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரையில் நாள் ஒன்றுக்கு 350 சுற்றுலாப் பயணிகள் என்ற அடிப்படையில் சுவிட்சர்லாந்து மற்றும் ஜெர்மனிய சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அழைத்துச் செல்வது வழமையானதாகும்.

ஓர் ஆண்டில் சுமார் 9000 சுற்றுலாப் பயணிகள் வரையில் இவ்வாறு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.

கடந்த ஆண்டு இந்த கோவிட் காரணமாக இந்த சேவை நடைபெறவில்லை.

தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளின் மூலம் குறிப்பிட்ட தரப்பினர் லாபமீட்டுவதனால் நாட்டின் ஒட்டுமொத்த சுற்றுலாத்துறையும் பெரும் பின்னடைவை எதிர்நோக்கக் கூடிய அபாயம் உருவாகியுள்ளது.

நாட்டில் அந்நிய செலாவணி வருமானத்திற்கு பெரும் நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ள இந்த சூழ்நிலையில் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் இவ்வாறான தீர்மானங்கள் மேலும் சிக்கல்களையே தோற்றுவிக்கும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

சுற்றுலாத்துறை வருமானத்தை இழக்கும் ஆபத்தில் இலங்கை

இலங்கை அரச அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் அசமந்த போக்கினால் சுற்றுலாத்துறையின் மூலம் ஈட்டபடக்கூடிய வருமானத்தை இழக்கும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளது.

சுற்றுலாத்துறை வருமானத்தை இழக்கும் ஆபத்தில் இலங்கை

Search here