Search

Menu

Keeping you Informed News and Views..

சுவிசில் இருந்து ஆண்டு தோறும் 30000 பேர் வெளியேறுகின்றனர்

கடந்த 2019ம் ஆண்டில் 100 வயதான இரண்டு மூதாட்டிகள் சுவிட்சர்லாந்தை விட்டு வெளியேறி புதிய வாழ்க்கையை தொடங்கியிருந்தனர்.

சுவிசில் இருந்து ஆண்டு தோறும் 30000 பேர் வெளியேறுகின்றனர்

சுவிட்சர்லாந்தில் ஆண்டு தோறும் சுமார் 30000 சுவிஸ் பிரஜைகள் நாட்டை வெளியேறிச் செல்வதாக புள்ளிவிபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுவிட்சர்லாந்து பிரஜைகள் உலகம் பூராவும் பரவியிருந்தாலும் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் ஐரோப்பிய நாடுகளில் குடிபெயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி மற்றும் பிரித்தானியா போன்ற நாடுகளிலேயே அதிக எண்ணிக்கையிலான சுவிட்சர்லாந்து பிரஜைகள் குடியேறியுள்ளனர்.

அமெரிக்கா, கனடா, தென் அமெரிக்கா மற்றும் பிரேஸில் போன்ற நாடுகளிலும் சுவிட்சர்லாந்து பிரஜைகள் அதிக எண்ணிக்கையில் குடியேறுகின்றனர்.

இவ்வாறு சுவிட்சர்லாந்தை விட்டு வெளியேறும் நபர்களின் வயது எல்லை பெரும்பாலும் 20 முதல் 34 ஆகும் என புள்ளி விபரத் தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன.

எவ்வாறெனினும், கடந்த 2019ம் ஆண்டில் 100 வயதான இரண்டு மூதாட்டிகள் சுவிட்சர்லாந்தை விட்டு வெளியேறி புதிய வாழ்க்கையை தொடங்கியிருந்தனர்.

பொதுவாக சுவிட்சர்லாந்திலிருந்து ஆண்டு தோறும் வெளியேறுவோரின் எண்ணிக்கை நாட்டுக்குள் வருவோரின் எண்ணிக்கையிலும் அதிகமானது என்பது குறிப்பிடத்தக்கது.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

Search here