Search

Menu

Keeping you Informed News and Views..

சுவிசில் இறப்பு அதிகரித்த போதிலும் மக்கள் தொகையும் அதிகரிப்பு

2020ஆம் ஆண்டில் குறைவான திருமணங்களும், விவாகரத்துக்களும் நிகழ்ந்துள்ளன. இது கொவிட் 19 தொற்றுநோயினால் ஏற்பட்ட தாக்கம் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சுவிசில் இறப்பு அதிகரித்த போதிலும் மக்கள் தொகையும் அதிகரிப்பு

சுவிட்சர்லாந்தில் 2020ஆம் ஆண்டு இறுதியில் மொத்தமாக 8,667,100 பேர் வாழ்ந்ததாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இது முந்தைய ஆண்டைவிட 61,100 அல்லது 0.7 சதவீத அதிகரிப்பாகும்.

முந்தைய ஆண்டைவிட 8,200 அதிகமான இறப்புக்கள் மற்றும் குறைவான பிறப்புக்கள் இருந்தபோதிலும், நிகர இடம்பெயர்வு மக்கள் தொகையை அதிகரிக்கச் செய்தது.

கூட்டாட்சி புள்ளிவிவர அலுவலகத்தின் (FSO) தற்காலிக புள்ளிவிவரங்கள் செவ்வாய்க்கிழமை வெளிப்புற இணைப்பில் இந்த விடயங்கள் தெரியவந்துள்ளது.

இதேவேளை, சுவிட்சர்லாந்தைவிட்டு வெளியேறுபவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. சுமார் 56,000 பேர் சுவிட்சர்லாந்திற்கு வந்துள்ளனர். ஆனால் 2019ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது குடிவரவு மற்றும் குடியகல்வு முறையே 3.9 வீதமாகவும், 15.6 வீதமாகவும் குறைந்துள்ளது.

அத்துடன், பதிவாகியுள்ள இறப்புக்களில் அதிகமானவை கொவிட் 19 தொற்றினால் ஏற்பட்டுள்ளதாக FSO தெரிவித்துள்ளது.

பிறப்பு விகிதத்தில் தொற்றுநோயின் தாக்கம் குறித்து துல்லியமான அறிக்கை எதுவும் வௌியிட முடியாது என்று FSO தெரிவித்துள்ளது.

பிறப்புக்களின் எண்ணிக்கை 2019ஆம் ஆண்டில் 86,200ஆக பதிவாகியிருந்த நிலையில், கடந்த ஆண்டு இது 85,500ஆக குறைந்துள்ளது.

இவர்களில் சுமார் 72.4 வீதமானோர் திருமணமான பெற்றோருக்குப் பிறந்த குழந்தைகள் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஒரு பெண்ணின் சராசரியாக குழந்தைகளின் எண்ணக்கை 1.46ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிறப்பிற்கும், இறப்பிற்கும் இடையே உள்ள வேறுபாடு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது நடைமுறையில் பாதியாக பதிவாகியுள்ளது. 18,400 முதல் 9,500 பேர் வரை குறைந்துள்ளதாக பதிவாகியுள்ளது. இந்த சரிவு முக்கியமாக இறப்புக்களின் அதிகரிப்பால் ஏற்பட்டுள்ளதாக புள்ளிவிபர அலுவலகம் தெரிவிக்கிறது.

Ticino, Bern, Basel Country, Basel City, Neuchâtel, Graubünden, Jura, Schaffhausen and Glarus ஆகிய கென்டோன்களில் 2004ஆம் ஆண்டு பிறப்புவீதம் குறைவாகவே பதிவாகியுள்ளது. அத்துடன் குழந்தைகள் பிறந்ததைவிட அதிகமான மக்கள் இறந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2020ஆம் ஆண்டில் குறைவான திருமணங்களும், விவாகரத்துக்களும் நிகழ்ந்துள்ளன. இது கொவிட் 19 தொற்றுநோயினால் ஏற்பட்ட தாக்கம் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், 34,900 திருமணங்கள் நடந்துள்ளன. இதில் 5.2 வீதமானோர் சுவிட் நாட்டத்தவர் என்றும், வெளிநாட்டு அல்லது கலப்பு தேசிய தம்பதகள் 15 வீதம் என்றும் பதிவாகியுள்ளது.

SOURCE: : Swissinfo.ch

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

Search here