சுவிட்சர்லாந்தில் டெங்கு நோயாளர்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த மாதம் இதுவரையில் 138 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
கடந்த ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது இந்த ஆண்டில் நோயாளர் எண்ணிக்கை செப்டம்பர் மாதத்தில் மட்டும் 30 என்ற எண்ணிக்கையினால் உயர்வடைந்துள்ளது.
ஐரோப்பா முழுவதும் டெங்கு நோய் பரவி வருவதாக உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
காலநிலை மாற்றம் காரணமாக நுளம்புகள் வாழ்வதற்கான சிறந்த சூழல் காணப்படுவதாகவும் இதனால் டெங்கு நோயாளர் எண்ணிக்கை அதிகரிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
டெங்கு நோய் தொற்று காணப்படும் பகுதிகளிலிருந்து நாடு திரும்புவோரின் ஊடாகவும் இந்த நோய் தொற்று சுவிட்சர்லாந்தில் பரவுவதாக சூரிச் பல்கலைக்கழக மருத்துவ நிபுணர் டாக்டர் ஜென்ஃபர் தெரிவிக்கின்றார்.
உலக அளவில் டெங்கு நோய் பரவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
சுவிட்சர்லாந்தில் டிக்கினோ கான்டனில் அதிக அளவு டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.