சுவிட்சர்லாந்தில் பூச்சிக்கொல்லிகளின் விற்பனை அதிகரித்துள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டு தாவரங்களை பாதுகாக்கும் பூச்சிக்கொல்லிகள் 2259 தொண்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
குறித்த ஆண்டில் நாட்டில் நிலவிய ஈரமான காலநிலையை இதற்கான பிரதான ஏது என தெரிவிக்கப்படுகிறது.
சமஸ்டி விவசாய அலுவலகம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.
சில வகையான தாவரங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக இவ்வாறு விவசாயிகள் அதிக அளவில் பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தி உள்ளனர்.
கடந்த 2020 ஆம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது 2021ம் ஆண்டில் 17 வீதம் அதிக அளவில் பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
அதிகளவான மழை வீழ்ச்சி காரணமாக தாவரங்களுக்கு பல்வேறு நோய் தாக்கங்கள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக இயற்கை விவசாய நடவடிக்கைகளுக்கு அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது