Search

Menu

Keeping you Informed News and Views..

சுவிட்சர்லாந்தின் பத்து புதுமையான சட்டங்கள்! உங்களுக்குத் தெரியுமா?

சுவிட்சர்லாந்தின் பத்து புதுமையான சட்டங்கள் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை

சுவிட்சர்லாந்தின் பத்து புதுமையான சட்டங்கள்! உங்களுக்குத் தெரியுமா?

சுவிட்சர்லாந்தின் பத்து புதுமையான சட்டங்கள் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை

உலகின் பல இடங்களில் இருந்து புதிதாக சுவிட்சர்லாந்து வருபவர்களுக்கு அது ஒழுங்கான முறையில் இருப்பதாகத்; தோன்றும். அவர்கள் எவ்வாறு அதைச் செய்கிறார்கள்? சுவிட்சர்லாந்தின் உன்னிப்பான சுத்தம் மற்றும் அதில் ஊன்றியிருத்தல் உண்மையிலேயே அதன் கலாச்சாரத்தில் இருந்துதான் வருகிறது. எனினும் அது கவர்ச்சியுடன் கூடிய சில சட்டங்களின் கட்டுக்கோப்பிலேயே அமைந்துள்ளது.

சுவிட்சர்லாந்து அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் சட்டங்கள் மற்றும் உத்தரவுகள் சுமார் 4980 வரை உள்ளன. இதற்கு மேலதிகமாக மாகாண மட்டத்தில் மேலும் 17 ஆயிரம் சட்டங்கள் உள்ளன.

சுவிட்சர்லாந்திலும் மற்றும் மாகாண மட்டத்திலும் அமுல் படுத்தப்படும் சட்டங்களைப்பற்றி ஒரு வார காலம் நாம் அலசி ஆராய்ந்த பின்னர் சுவிட்சர்லாந்தின் வித்தியாசமான ஆச்சரியமான மற்றும் விநோதமான சில சட்டங்கள் பற்றி உங்களுக்கு அறியத் தருகிறோம்.

நாய் மற்றும் பூனை இறைச்சியை உண்ணுதல்

(அது உங்கள் செல்லப் பிராணியாக இருக்கும் வரை)

சுவிட்சர்லாந்தின் சட்டங்களில் மிகவும் வியப்புக்குரிய சட்டம் என்னவென்றால் உங்கள் வளர்ப்புப் பிராணியான நாயை அல்லது பூனையை நீங்கள் கறி வைத்து உண்ணலாம் என்பதாகும். ஆனால் அது உங்கள் வளர்ப்புப் பிராணியாக இருக்கவேண்டியது கட்டாயமாகும்.

பூனை அல்லது நாய் இறைச்சியை அல்லது அவ்வாறான இறைச்சி சேர்ந்த உணவு வகைகளின் விற்பனை சட்ட விரோதமானது. எனினும் தாம் வளர்க்கும் செல்லப் பிராணிகளை சமைத்துச் சாப்பிடுவதற்கு எந்தத் தடையும் இல்லை.

எனினும் உங்கள் பூனை அல்லது நாய் இறைச்சிக் கறியை சாப்பிட எவரையாவது அழைத்தால் நீங்கள் சட்டத்தில் சிக்கிக் கொள்வீர்கள். அத்துடன் சில சமூகச் சிக்கல்களையும் நீங்கள் எதிர்நோக்க வேண்டியிருக்கும்.

தனிப்பட்ட ரீதியில் நாய் இறைச்சியை சாப்பிடுவதை தடை செய்ய எந்தக் காரணமும் இல்லை என்று அரச விலங்கு வைத்திய அலுவலகம் கூறியுள்ளது. அது கலாச்சாரம் தொடர்பான ஒரு விடயம். எனினும் இந்த ருசியான கலாச்சாரம்உங்களது நான்கு சுவர்களுக்கு அப்பால் செல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள என்று அந்த அலுவலகம் கூறுகிறது.

உங்கள் காரைக் கழுவுதல்

சுவிட்சர்லாந்தைப் பொறுத்தவரை உங்கள் வீட்டில் வைத்து ரப்பர் குழாய் (ஹோஸ் பைப் ) மூலம் உங்களது காரைக் கழுவுவது சட்ட விரோதமானதாகும். காரைக் கழுவும் நீரில் உள்ள சோப் நிலத்தடி நீரை மாசு படுத்தும் என்பதே இதற்குக் கூறப்படும் காரணமாகும்.

எவ்வாறெனினும் சுவிட்சர்லாந்தில் அழுக்கான கார் ஒன்றை நீங்கள் ஒரு போதும் காணமுடியாது. அது எப்படி முடிகிறது? சம்பளம் பெறும் கார் கழுவுபவர்கள் அந்த வேலையை அழகாக செய்து விடுகிறார்கள்.

சிறு நீர் கழித்தல் (இரவு 10 மணிக்குப் பிறகு)

ஜெர்மனியில் உள்ள நீதிபதியொருவர் அண்மையில் வழங்கிய தீர்ப்பொன்றில் ஜெர்மனியில் உள்ள ஆண்களுக்கு நின்று கொண்டு சிறு நீர் கழிக்கும் உரிமை இருப்பதாக கூறியிருந்தார். ஆனால் சுவிட்சர்லாந்தில் உள்ள ஆண்களுக்கு அவ்வாறான உரிமை இல்லை.

இரவு 10 மணிக்குப் பின்னர் நின்று கொண்டு சிறு நீர் கழிப்பதால் ஏற்படும் சத்தம் அடுக்கு மாடி தொகுதியில் உள்ள மற்றைய குடியிருப்பாளர்களுக்கு தொந்தரவாக இருக்கும் என்பதனாலேயே இரவு 10 மணிக்குப் பின்னர் நின்று கொண்டு சிறு நீர் கழிப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

அதேவேளை ஒரு சில. அடுக்கு மாடித் தொகுதிகளில் இரவு 10 மணிக்குப் பிறகு டாய்லெட்டுகளை பிளஷ் பண்ணுவது கூட தடை செய்யப்பட்டுள்ளதாக கேள்விப்படுகிறோம். அப்படியிருந்தால் கூட சுவிட்சர்லாந்து சுத்தத்துக்கு தகுந்த மரியாதை கொடுக்கிறது என்பதை சொல்லித்தான் ஆக வேண்டும்.

சுவிஸ் மக்களுக்கு ஞாயிற்றுக்கிழமைகள் ஓய்வு தினமாகும். எனினும் சட்டத்தை சரியாக அமுல் படுத்துவதானால் ஞாயிற்றுக் கிழமையை ஓய்வாகக் கழிக்கமுடியாது.

சுவிட்சர்லாந்தில் ஞாயிற்றுக் கிழமைகளில் மறு சுழற்சி செய்ய முடியாது. இயந்திரத்தின் மூலம் புல் வெட்டுவதோ செதுக்குவதோ முடியாது. துணிகளை வெளியே காயப் போட முடியாது. துளைக்கும் கருவியால் துளை போடவோ சுத்தியலால் அடிக்கவோ முடியாது.

அத்துடன் ஞாயிற்றுக் கிழமை சட்டங்களில் சில நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்படுவதில்லை. ஒரு சில அடுக்கு மாடி தொகுதிகளில் மட்டுமே கடைப்பிடிக்கும் சட்டங்களில் ஒன்று ஞாயிற்றுக் கிழமைகளில் கூட்டம் சேரக் கூடாது. என்பதாகும்.

சத்தத்தை ஏற்படுத்தும் எந்தவொரு விடயமும் சட்டவிரோதமானதாகும். துணிகளைக் காயப் போடுவது சத்தத்தை ஏற்படுத்தாவிட்டாலும் அது அழகாகவும் நேர்த்தியாகவும் இருக்காது என்பதால்தான் அதற்குத் தடை.

சுவிட்சர்லாந்தைப் பொறுத்தவரை ஞாயிற்றுக்கிழமைகளை படுக்கையில் தூங்கிக் கழிப்பதுதான் ஒரே வழி

நிர்வாண நடை பயணம்

நிர்வாணத்தைப் பொறுத்தவரை மற்றைய நாடுகளை விட சுவிட்சர்லாந்து முன்னேற்றகரமான கொள்கைகளை பின்பற்றும் போதிலும் அதில் ஒரு இறுதிக் கோடு இருக்க வேண்டுமல்லவா? அந்த இறுதிக் கோடுதான் மலைகளின் மீதான நிர்வாண நடை பயணம்.

Appenzel மாகாணத்தில் அண்மையில் ஒருவர் நிர்வாண நடைபயணம் செய்தபோது அவருக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.

மரியாதைப் பண்புகளை மீறியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. எனவே நிர்வாணமாக மலையேறும் விருப்பத்துடன் சுவிட்சர்லாந்து வருவதாக இருந்தால் நீங்கள் ஜெர்மனியிலேயே இருந்து கொள்வதுதான் சரி.

ஆடல் புரட்சி

ஹொலிவுட் நகரமான உட்டா போமொன்ட்டைப் போல் சுவிட்சர்லாந்தின் ஒரு சில இடங்களில் ஆடுவதற்கு ஒரு சில நாட்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Aargau, Glarus, Uri, Obwalden, Solothurn, Thurgau kw;Wk; Appenzell Innerrhoden ஆகிய இடங்களில் சில கிறிஸ்தவ விடுமுறை நாட்களில் ஆடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. யேசு கிறிஸ்துவின் வாழ்க்கையை கொண்டாடும் போது உல்லாசத்துக்கு இடமில்லை என்று சட்டம் இந்த தடையை நியாயப்படுத்துகிறது.

செல்லப் பிராணிகளை தனியே விட முடியாது.

தங்களது தனிமையை தாங்கிக் கொள்ள முடியாததால்தான் நிறையப் பேர் செல்லப்பிராணிகளை வளர்க்கின்றனர். எனினும் சுவிட்சர்லாந்தில் செல்லப்பிராணிகளுக்கிடையே தனிமைப்படுதல் தடை செய்யப்பட்டுள்ளது.

கூடிப்பழகும் இயல்பு கொண்ட கினி பன்றிகள், கோல்ட் பிஷ் மீன்கள் மற்றும் பட்ஜி பறவைகள் ஆகியவற்றை தனியே வைத்திருக்க முடியாது. அத்துடன் அவற்றை சிறிய தொட்டிகளிலோ கூண்டுகளிலோ வளர்க்கவும் முடியாது. அவற்றை வளர்ப்பதானால் ஜோடியாகத்தான் வளர்க்க வேண்டும்.

அணு மறைப்பிடம்

சுவிட்சர்லாந்தின் நடு நிலை கோட்பாடு ஒரு சில எதிரிகளையும் ஏற்படுத்தியுள்ளது. எனினும் சுவிட்சர்லாந்து அணு யுத்தத்துக்கு அஞ்சுகிறது. இதனால் சுவிட்சர்லாந்தில் உள்ள எந்தவொரு வீட்டிலும் அணு மறைப்பிடம் ஒன்று இருப்பது அல்லது அதற்கான வழி இருப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

சுவிட்சர்லாந்தின் பத்து புதுமையான சட்டங்கள்! உங்களுக்குத் தெரியுமா?

சுவிட்சர்லாந்தின் பத்து புதுமையான சட்டங்கள் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை

சுவிட்சர்லாந்தின் பத்து புதுமையான சட்டங்கள்! உங்களுக்குத் தெரியுமா?

Search here