சுவிட்சர்லாந்தில் கடுமையான இடி மின்னல் தாக்கம் ஏற்பட்டுள்ளது.
ஒரு மணியத்தியாலத்தில் 20000 மின்னல் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
சுவிட்சர்லாந்தின் ஜெர்மன் கான்டன்களே அதிகளவில் இடி மின்னல் தாக்குதல்களில் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சில பிராந்தியங்களில் பலத்த காற்று வீசியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சுவிட்சர்லாந்தில் வெப்பநிலையிலும் வீழ்ச்சி பதிவாகியுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சீரற்ற காலநிலை இந்த வார நடுப்பகுதி அளவில் சீராகும் எனவும் கடுமையான வெப்பநிலையுடன் கூடிய காலநிலை நிலவும் என அறிவிக்கப்பட்டுள்ளது.