சுவிட்சர்லாந்தின் சில பகுதிகளில் காட்டுத்தீ ஏற்படக்கூடிய அபாயம் நிலவி வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் நிலவி வரும் வறட்சியான காலநிலை காரணமாக இவ்வாறு காட்டு தீ பரவக்கூடிய அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
கடத்தி ஏற்பட்டால் அதனை கட்டுப்படுத்துவதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சமஸ்டி சுற்றாடல் அலுவலகம் அறிவித்துள்ளது.
நாட்டில் நீண்ட காலமாக மழையற்ற காலநிலை நிலவி வருவதனால் காட்டுத்தீ ஏற்படக்கூடிய அனர்த்தம் அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
அநேக சந்தர்ப்பங்களில் சுவிட்சர்லாந்தில் காட்டுத்தீ மனித செயற்பாடுகளினால் ஏற்படுவதாகவும் குறிப்பாக கவனயீனம் காரணமாக இவ்வாறான சம்பவங்கள் பதிவாவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சில சந்தர்ப்பங்களில் மின்னல் தாக்குதல்கள் மூலமும் காட்டுத்தீ ஏற்படுகின்றது.